கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !
சமீபத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கியுள்ள முக்கிய ஆணையில் (வழக்கு எண்: SA4827/A/2023 & SA17794/A/2023), தனியார் மற்றும் CBSE பள்ளிகள் வகுப்புவாரியான கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களிலும், பள்ளி இணையதளங்களிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற (AISF)த்தினர், தமிழகத்தில் “அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதாக அவ்வமைப்பின் மாநிலக்குழுவின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.