Facebook – நயா பைசா தரமாட்டேன்
Facebook எனக்கு எப்படி வேலை செய்கிறது என்கிற pattern இப்போதுதான் புரியவருகிறது. என்னை Digital creator அது இது என அதுவாகவே எனக்கு பட்டம் தந்து என்னிடம் பணம் கேட்க ஆரம்பித்தது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணியிடம் பேரம் பேசும் செந்தில் போல, கடைசியில் மாதம் 45 ரூபாய் கட்டு போதும் என்கிற அளவுக்கு பேஸ்புக் இறங்கி வந்துவிட்டது.. ஆனாலும் இதுபோல சமூக வலைத்தளங்களில் பணம் செலுத்துவதற்கு எனக்கு விருப்பமில்லை. எனவே அதனை முற்றிலும் தவிர்த்து வருகிறேன்.

அதன் காரணமாக பேஸ்புக் எனக்கு ஒரு வேலையை செய்கிறது. அதாவது நான் மூன்று நான்கு பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது.. வெறுங்கையுடன் வந்த மருமகளை ஓரங்கட்டும் மாமியார் போல என் விஷயத்தில் பேஸ்புக் நடந்து கொள்கிறது. அப்படியாவது ரோஷம் வந்து நான் பணம் கட்டுவேனா என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதுதான் இல்லை..! பெரியார் சொன்னது போல, நான் எழுதுவது என்னைத் தவிர வேறு யாருக்குமே தெரியாமல் போனால் கூட பரவாயில்லை நானே எழுதி நானே படித்து நானே அதற்கு லைக் போட்டுக் கொண்டு தொடர்ந்து எழுதுவேனேத் தவிர நயா பைசா யாருக்கும் எதற்கும் தர மாட்டேன்..!
– சிவசங்கரன் சரவணன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.