பிரபாஸின் ‘ஃபெளசி’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அதிரடியான கான்செப்டுடன்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்திற்கு ‘ஃபெளசி’ என்ற தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1940- களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர் களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.

குளோசப் ஷாட்டில்,  கடும் உறுதியான பாவனையில் வீரத்தை வெளிப்படுத்துகிறார் பிரபாஸ் . அவரது கண்களில் தெரியும் தீவிரம், கூர்மையான மீசையுடன் கூடிய தோற்றம், தன்னுடைய கடமைக்காக உயிரை அர்ப்பணிக்கும் வீரனின் உருவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி நடிக்கிறார். மேலும் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.     ‘ஃபௌசி’, ஒரு சாதாரண பான்-இந்தியா படம் அல்ல, பிரபாஸின் சினிமாப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ள  காவியம்!

தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது ஃபெளசி.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தொழில்நுட்பக் குழு

எழுத்து, இயக்கம் : ஹனு ராகவபுடி

தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

தயாரிப்பாளர்கள் : நவீன் எர்நேனி, Y. ரவி சங்கர், பூஷன் குமார்,

ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜீ ,(ISC)

இசை : விஷால் சந்திரசேகர்,

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புரொடக்சன் டிசைனர் : அனில் விலாஸ் ஜாதவ்,

எடிட்டிங் : கோதகிரி வெங்கடேஸ்வரராவ்

பாடல்கள் : கிருஷ்ணகாந்த்,

நடன அமைப்பு : பிரேம் ரக்‌ஷித்,

உடை வடிவமைப்பு : ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர்,

வி.எஃப்.எக்ஸ்: ஆர்.சி. கமலக்கண்ணன்,

பப்ளிசிட்டி டிசைனர்கள் : அனில் & பானு,

மக்கள் தொடர்பு : யுவராஜ்,

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

 —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.