விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பூதலூர் நால் ரோட்டில் விவசாயிகளால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். காவிரிடெல்டா  விவசாயிகள்  பாதுகாப்புச்சங்க நிறுவனர் மற்றும் தலைவர் தர்ம. சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பூதலூர் சுற்றுவட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.

ரகுநாதன், செல்வராசு, துளசிராஜா, குணராஜா, ஆரோக்கியராஜ், கீர்த்தி அய்யனார்புரம் உடையார் தெரு சஞ்சீவிபுரம் உடையார்தெரு தொண்டராயன்பாடி மற்றும் பல  ஊர்களில்  வருகை  தந்த விவசாயிகள் மேகதாதுவில் அணைக்கட்ட  முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், ஆறுகள், ஏரிகளை தூர்வார குறுவை பொய்த்து விட்ட நிலையில் ஏக்கா் ஒன்றுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25,000/-வழங்கிட தமிழக அரசை  வலியுறுத்தியும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சியில் உள்ள ஆற்றுப்பாதுகாப்புபக் கோட்டத்திலும், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்திலும் நடைபெற்ற ஊழலுக்கு
உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி முழக்கம் செய்தனர். இறுதியில் கர்நாடக முதல்வர் T.K. சிவக்குமார் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் காவல் நிலையம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

— தஞ்சை க.நடராசன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.