அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மதுரை மாநகர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளைக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளக்கல் குப்பை கிடங்கு அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதி விவசாயிகள் அகத்திக்கீரை, சிறு கீரை,பொன்னாங்கண்ணி, தண்டு கீரை, முருங்கைக்கீரை,கத்திரிக்காய், வெண்டைக்காய், மருதாணி போன்றவை விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் கீரை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மதுரை மாநகர் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக மதுரை மாநகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலம் வழியாக இந்த வெள்ளக்கலுக்கு வந்தடையும் அந்த நீரினை கொண்டு விவசாயம் செய்து வந்தனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய்தொற்று பரவும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டும் விவசாயத்திற்கு தருவதாகவும் 400 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் அவை அருகில் உள்ள அய்யன் பாப்பாக்குடி கம்மாய் மற்றும் வைத்தனேந்தல் கண்மாயில் கலக்கிறது.

2026 June 11 - 17 Angusam Book

இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது என விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுகுறித்து அண்மையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் தலைமைச்செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை காகன் தீப் சிங் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து 15 வருடங்களாக செயல்படும் சுத்திகரிப்பு நிலையம் மாதம் 15லட்சம் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது .

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

ஆனால் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மதுரையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சந்தப்பேட்டை, முத்துப்பட்டி பகுதிகளில் உள்ள கிணறுகளில் சேமிக்கப்பட்டு குழாய் வழியாக வெள்ளக்கல் வந்தடையும். இங்கு விவசாய நிலத்திற்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் குழாய் மூலம் நீர் பிரியும் இடத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை அடைத்து ஒரு பக்கமாக கழிவுநீர் கிணறுகளுக்கு திருப்புவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளக்களுக்கு வருகைதந்து பணியை தொடங்கினர். அப்போது அதனை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் கையில் கீரை கட்டுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அவனியாபுரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்ததால் அந்த இடம் பரபரப்பானது வெள்ளிக்கல் பகுதி விவசாயிகளை தொந்தரவு செய்யக்கூடாது என மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளதாகவும் விவசாயத்திற்கு கழிவுநீர் கொடுக்காவிட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட நீரையாவது அதிகமாக கொடுங்கள் இல்லை என்றால் எங்கள் விவசாயம் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தை நம்பி உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலத்திற்கு செல்வதால் அந்த விவசாயப் பொருட்களில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால் தண்ணீரை நிறுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குழாய் மூலமாகஅனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆனால் அந்த தண்ணீர் பத்தாது வீணாக கண்மாயில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட வேண்டும் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.