தேனி – வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சியில் விவசாய நிலங்களை அகற்ற நோட்டீஸ் கொடுத்த வனத்துறை மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சியில் 400 விவசாய நிலங்களை 1000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக  காப்பி, ஏலம், எழுமிச்சை, மிளகு, அவகோடா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனா்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

அகமலை ஊராட்சியில் வசித்து வரும் அப்பகுதி மக்களுக்கு மின் வசதி இருந்தும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு மறுக்கப்படுவதும், குடிநீர் குழாய் அமைப்பதை தடுத்து வருகின்றனர்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் விவசாயம் செய்யப்பட்ட விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அகமலை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து உள்ளது.

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்இந்நிலையில் அகமலை ஊராட்சியில் 1000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை, பெரியமூங்கில், சின்னமூங்கில், பட்டூர், படப்பம்பாறை, சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, வாழைமரத்தொழு, எருமைதொழு, மருதையனூர், சூழ்துகாடு, அலங்காரம், கானமஞ்சி, டார்சை, முத்துக்கோம்பை, உலக்குரட்டி, கொத்தமல்லி காடு ஆகிய கிராம 400 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர் நிகழ்வாக உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, மின் வசதி இருந்தும் வீடுகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு கொடுப்பதை தடுத்தும் மற்றும் விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கும் வனத்துறை மீது தக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, வனத்துறை மூலம் இனி வரும் காலங்களில் அப்புறப்படுத்தும் நிகழ்வு நடக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அகமலை ஊராட்சி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.