அங்கும் பார்வையில் ‘ஜோரா கைய தட்டுங்க ‘
தயாரிப்பு: ‘வாமா எண்டெர்டெய்ன்மென்ட்’ ஜாகிர் அலி. இணைத் தயாரிப்பு: ‘சரவணா பிலிம் ஆர்ட்ஸ்’ ஜி.சரவணா. டைரக்டர்: வினீஷ் மில்லினியம். ஆர்டிஸ்ட்ஸ்: யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, வசந்தி, கல்கி, மேனகா, அருவி பாலா, மணிமாறன், மூர், நைரா நிஹார், வரிஜாகஷன். ஒளிப்பதிவு: மதுஅம்பாட், இசை: எஸ்.என்.அருணகிரி. பின்னணி இசை: ஜிதின் ரோஷன், எடிட்டிங்: சாபு ஜோசப்.பி.ஆர்.ஓ: சதீஷ் (எஸ்-2) யோகி பாபுவின் அப்பா பெரிய மேஜிஷியன்.
ஆபத்தான தீ மேஜிக் பண்ணும் போது உடல் கருகி இறந்து விடுகிறார். இதைப் பார்த்த யோகி பாபு அதிர்ச்சியானாலும் அப்பாவைப் போல பெரிய மேஜிஷியன் ஆக முயற்சிக்கிறார். ( படத்துல யோகி பாபு கேரக்டர் பெயரே மேஜிஷியன் தான்) ஒரு குழந்தையை வைத்து ஆபத்தான மேஜிக் பண்ணும் போது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைக்கின்றனர். போலீசும் அவரை லாடம் காட்டுகிறது. அதன் பிறகு என்ன நடக்குது? என்னென்னவோ நடக்குது. படம் முடியும் வரை நமக்கு எதுவுமே புரியல, தெரியல.
யோகி பாபுவுடன் இருக்கும் கல்கி “எல்லாரும் ஜோரா கைய தட்டுங்க” ன்னு இரண்டு சீன்ல கூவுறாரு. அவ்வளவு தான் இந்தப் படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம். பூத் பங்களா, மர்மக் கொலைகள்னு நம்மளை சுத்தலில் விட்டு அடிக்கிறாரு டைரக்டரு. சாந்தி ராவ்னு ஒரு பப்ளிமாஷ் ஹீரோயின். அவருக்கு தோழிகளா புஷ்டியான இரண்டு நடிகைகள் ( பேரமெல்லாம் அவசியம் இல்லை), சில்லுவண்டு ரவுடிகள் நாலஞ்சு பேரு. அதுல புரொடியூஸரும் ஒருத்தரு. இன்ஸ்பெக்டராக ஹரிஷ் பெராடி. அம்புட்டுப் பேரையும் படு அபத்தமா நடிக்க வச்சு நம்மை கொலையா கொன்னுட்டாரு டைரக்டரு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
யோகி பாபுவிடம் நான்கு நாட்கள் கால்ஷீட், மேஜிஷியன் காஸ்ட்யூம் ரெண்டு செட், சாதா காஸ்ட்யூம் ரெண்டு செட் இதையெல்லாம் வச்சு படம் முழுக்க யோகி பாபு இருக்குற மாதிரி மேஜிக் காட்ட ட்ரை பண்ணிய டைரக்டரின் ‘அட்டெம்ப்ட் டோட்டல் ஃபெயிலியர் ‘ ஆனது தான் மிச்சம். ரொம்ப சுமாராக்கூட கைய தட்ட நம்மால் முடியல.
— மதுரை மாறன்.