ஈராயிரம் ஆண்டுகளாக கருவறை இருள் ஒரு மயில்கள் அகற்றியவர் !
இந்தியா காணாத மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்திய சமூகநீதிச் சுடரொளி மக்கள் மனங்களில் மாண்புடைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முத்துவேல் கருணாந்தி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்து நாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க,,!
இந்துகளின் கட்சி என உரிமை கொண்டாடும் பாஜகவினர், . ‘இந்து விரோத கட்சி’ என்று குற்றம் சாட்டப்பட்ட திமு கழக அரசு இந்து மடத்தையும் காக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போன்றது.
இந்து ஆன்மீக நம்பிக்கையை மூலதனம் ஆக்கி, அதிகாரத்தைப் பிடித்த பாஜக இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வு ஆதாரத்தை அழித்தது. ஆனால், மக்களுக்கு சமத்துவ உணர்வும் சுயமரியாதையும் உணர்வும் ஊட்டி, மக்கள் வாழ்வில் மட்டுமில்லாமல் – தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தமிழர்களின் தன்மான ஆட்சிப் பயணம் தொடங்கியது. அப்பயணத்தை அண்ணாவிற்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னெடுத்தார். கலைஞருக்கு பின்பு, தளபதி ஸ்டாலின் வழியில் அப்பயணம் தொடர்கிறது.

திராவிடத் தமிழர் தன்மான ஆட்சியின் மிக முக்கியமான சமூகம் நீதித் திட்டம் ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்துவது. இதற்கான சட்டத்தை 1972ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்தார். அப்போது சில வஞ்சகக் கூட்டத்தார், நீதிமன்றம் படியேறி நீதி என்ற பெயரில் அநீதியாக சதி செய்து செய்து தடுத்தனர். 2006 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 2007 2008 ஆம் ஆண்டு பயிற்சி பள்ளியில் படித்து முடித்து 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர்கள் தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது, தாயுமானவராக அரவணைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் வழியில் தளபதியும் கருவறையின் சாதி பேதத்தையும், பாலின பேதத்தையும் ஒழித்து, சமத்துவ ஆன்மீகத்தைக் கட்டி எழுப்பப் போராடி வருகின்றார். அவர் பக்கம் நாங்கள் நிற்கின்றோம்.
ஆகஸ்ட் 14, 2021 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 29 பார்ப்பனர் பார்ப்பனர்கள் அல்லாத அர்ச்சகர் மாணவர்களை நியமனம் முதலமைச்சராக அவர்கள் வழங்கினார்.
ஈராயிரம் ஆண்டுகளாக கருவறை இருள் ஒரு மயில்கள் அகற்றியவர் முதலமைச்சராக அவர்கள்.உயர் நீதிமன்றத்திலும் உற்சவ நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகளை தொடர்ச்சியாக ஆரியர்கள் பிஜேபி ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் போன்ற தொடர்ச்சியான வழக்குகள் போட்டு வருகிறார்கள் இது எதிர்த்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் உறுதியாக நின்று அர்ச்சகர் மாணவர்களுக்காக ஆதரவாக நின்று போராடி வருகிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் மூலம் இந்தத் திட்டம் நிறைவேறக்கூடாது என்பதற்காக, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்திற்கும், கொலை மிரட்டல்கள் விடுத்தும், அச்சுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பியும் வருகின்றன. உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் 2007 2008 ஆம் ஆண்டு 207 மாணவர்கள் பயிற்சி முடித்துள்ளார்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022 -2023 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ளிசி (4), ஙிசி (38), விஙிசி (31) மற்றும் ஷிசி (21) ஆகும்.
இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை, முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டில் 96 மாணவர்கள் 2025 -2026 ஆம் ஆண்டில் 100 அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பல்சர் பேச்சில் பெண்களும் ஏராளமானவர்கள் முடித்துள்ளார்கள்.
அதில் பாலின சமத்துவத்தோடு அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடக்க வேண்டும் என்று கூறி இருந்தோம். அதில் இரண்டு ஆண்டுகளாக அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடந்து முடிந்துள்ளன. அதில் பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு படித்து முடித்துள்ளார்கள் தற்போது ஆண்டிலும் 19 பெண் மாணவர்கள் படித்து முடித்து விட்டார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்து வருகிறது. கருசுமுக்கும் பெண்கள் கருவறைக்குள் என்ற முழக்கத்தை முன்வைத்தார் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை பல குடமுழுக்குகளும் அரிய வகையான ஆன்மீக சம்பந்தமான நூற்றுக்கணக்கான நூல்களையும் ஆய்வு செய்து அதை புத்தகமாகவும் வெளியிட்டு மிஷன் அல்லது துறை சார்பாக இலவச திருமணங்கள் பழமையான கோயில் கண்டறிந்து அதை திருப்பணி செய்வது கோயிலில் உள்ள ஓவியங்கள் சிற்பங்கள் கோயில் உடைய கலாச்சாரங்களும் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வழிகாட்டுதலும் சிறப்பான செயல்பாடுகளும் செய்து வருகிறார்.

இந்த பிறந்தநாளில் ஆரியத்திற்கு எதிராக சனாதன மனுதர்மத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அதில் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில் ஆகம கோவில்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், சென்னை பார்த்தசாரதி திருக்கோயில் போன்ற கோயில்களில் மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு கருவறையில் சமத்துவமாக அர்ச்சகராகவும் ஓதுவராகவும் பணியாற்ற நீங்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக உங்களிடம் கோரிக்கை முன்வைக்கிறோம்.
அவருடைய 73ஆம் பிறந்த நாளில் “ மீண்டும் திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்க வேண்டும்” உறுதிமொழி ஏற்றுக்கொள்வோம்..
பாசிசத்தை வீழ்த்த, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் ஜனநாயகக் போர்க்களம் காண்பது, நம் ஒவ்வொருவரின் மாபெரும் ஜனநாயகக் கடமை. இப்போர்களத்தில் கண்ணனாக நின்று, மு.க. ஸ்டாலின் எல்லோரையும் வழிநடத்திச் செல்கிறார். இது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பது ஆகும்.
”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்” என்கிற நற்சிந்தையுடையோர் ஒவ்வொருவரின் ஆன்மிக உள்ளத்தோடு, நம்முடைய முதலமைச்சர் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” வாழவேண்டும் என்று திருச்செவ்வடிகளை நினைந்து இறைஞ்சுகிறேன்.
வா.ரங்கநாதன், தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு








Comments are closed, but trackbacks and pingbacks are open.