வனத்துறையின் வசூல் வேட்டை..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வனத்துறையின் வசூல் வேட்டை..!

தனியார் பட்டா நிலங்களை மனைப் பிரிவுகளாக வகையறா செய்ய நகர ஊரமைப்பு இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் வனப்பகுதியின் அருகில் உள்ள தனியார் பட்டா நிலங்களை வீட்டுமனைகளாக வகையறா செய்ய வனத்துறையின் மூலம் தடையில்லா சான்று வழங்கப்பட வேண்டியது அவசியம்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

சென்னை மாவட்டத்தில் மாநகராட்சியின் கட்டுப்படாத பகுதியில் வனத்துறை அருகில் தனியார் பட்டா நிலங்களை மனைப்பிரிவு ஆக வரையறை செய்ய சென்னை மாவட்ட வனஅலுவலர் பிரியதர்ஷினியிடம் தடையில்லா சான்று பெற 5 லட்சம் வரை மாவட்ட வன அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர் இன்பராஜ் மற்றும் கண்காணிப்பாளர் கிருஷ்ணம்மாள் மற்றும் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி நிர்ப்பந்தம் செய்வதாக தனியார் பட்டா உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.   குறிப்பாக தற்போது ஒரு தனியார் பட்டா நிலங்களில் உரிமையாளரிடம் 15 லட்சம் வரை கேட்பதாக புகார் வருகிறது. குறிப்பாக இன்பராஜ்

என்ற எழுத்தர் மீது இதே புகார் காரணமாக காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு தற்போது இவர் தலைமறைவாக உள்ளார் இந்த எஃப்ஐஆர் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.