பிரசாந்த் கொடுத்த இலவச ஹெல்மெட் !
பிரசாந்த் கொடுத்த இலவச ஹெல்மெட் !
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வரும் 9ம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அந்தகன்’ பட புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் பிரசாந்த் சமீபத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக போக்குவரத்து போலீசில் அபராதம் செலுத்தியதாக தகவல் வெளியானது.
உண்மையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பிரபலம் என்றாலும், அது ஒரு தனியார் யூடியூபுக்காக நேர்காணலின் போது எடுக்கப்பட்டது .
காவல்துறை வழக்கு போடும் என்பதை இந்த விஷயம் உணர்த்துவதாக இருப்பதோடு, அனைவரும் பைக் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்காக ஹெல்மெட்டுகளை இலவசமாக வினியோகித்தவர் பிரசாந்த் என்பது பலருக்கும் தெரியாத உண்மை!
‘அந்தகன்’ அடையாளத்தோடு பிரசாந்த் கொடுத்த ஹெல்மெட் அணிந்த பைக் சென்னை சாலைகளில் வலம் வருகிறது!