அங்குசம் பார்வையில் ‘காமி’ [ GAMI ]

காரம் தூக்கலான கரம் மசாலா தெலுங்குப் பட டைரக்டர்களுக்கிடையே வித்யாதர் காகிடா, ரொம்பவே வித்தியாசமாகத் தான்  தெரிகிறார்.ஆனால்......

0

                            அங்குசம் பார்வையில் ‘காமி’ [ GAMI]

தயாரிப்பு: கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட் மீடியா, ஸ்வேதா வாஹினி ஸ்டுடியோஸ், க்ளைவுன் பிக்சர்ஸ். கார்த்திக் சபரீஷ். டைரக்‌ஷன்: வித்யாதர் காகிடா. நடிகர்—நடிகைகள்: விஸ்வக் சென், சாந்தினி செளத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா. தொழில்நுட்பக் கலைஞர்கள்.  ஒளிப்பதிவு: விஸ்வநாத் ரெட்டி செலுமல்லா, பாடல்கள் இசை: ஸ்வீகர் அகஸ்தி, பின்னணி இசை: நரேஷ் குமரன், எடிட்டிங்: ராகவேந்திர திருன். பி.ஆர்.ஓ.யுவராஜ்.

’காமி’ என்றால் தெலுங்கில் ‘தேடு’ என்று அர்த்தமாம். நீண்ட…… பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த நேரடி தெலுங்குப் படம் இந்தக் ‘காமி’. ஆங்கிலத்தில் சப்-டைட்டிலுடன் திரையிட்டதால் கதையை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரோஸ்மில்

அகோரி சாமியார்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கிறார் சங்கர் { விஸ்வக் சென்}. திடீரென அவரது உடலுக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்து என்னமோ செய்கிறது. சாதாரண மனிதர்கள் அவரைத் தொட்டாலே அவருக்குள் வேதியல் மாற்றம் ஏற்படுகிறது. தான் யார்? தனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது? என தலைமை அகோரியிடம் கேட்க, இதற்கான விடை காசி பிரக்யாராஜில் இருக்கும் சாமியார் கேதார் பாபாவிடம் தான் இருக்கிறது என்கிறார் தலைமை அகோரி.  தான் யார் என்பதைத் தேடுவதற்காக காசிக்குப் போகிறார் சங்கர்.

 

- Advertisement -

- Advertisement -

ஏதோ ஒரு பனிமலைப் பகுதி. அங்கே ஒரு ஆராய்ச்சிக்கூடம். அதில் அனாதைகளைக் கடத்தி வந்து மூளைக்குள் எதையோ செலுத்தி, ஆண்களை பெண்களாகவும் பெண்களை ஆண்களாகவும் மாற்றும் விபரீத ஆராய்ச்சி செய்கிறது ஒரு கும்பல். ஒரு சிறுவன் சிக்கிக் கொள்கிறான் அந்தக் கும்பலிடம்.  ஆரம்பத்துலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா.

4 bismi svs

அப்புறம் ஆந்திராவில் தேவதாசிகள் முறை இருக்கும் கிராமம். அங்கே தேவதாசியாக இருக்கிறார் அபிநயா. தனக்குப் பிறகு தனது பெண் குழந்தை, தேவதாசியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக தவியாய் தவிக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. ஊர்ப் பெரிய மனிதப் பொறுக்கிகள், அந்தக் குழந்தையையும் தேவதாசியாக்கிவிடுகிறார்கள்.

டைரக்டர் வித்யாதர் காகிடா, இந்த மூன்று வித கதைகளையும் எப்படி கனெக்ட் பண்ணிக் காமிக்கிறார் என்பது தான் இந்த ‘காமி’. ஆராய்ச்சிக்கூடம், ஆந்திர கிராமம், பனிமலைப் பிரதேசம் என மூன்றுவிதமான லொக்கேஷன்களில் பயணிக்கிறது கதை. அந்தக் கிராமத்தைத் தவிர, மற்ற எல்லாத்தையும் ‘கிரீன்மேட் டெக்னாலஜி’ துணையுடன் ரொம்பவே சிரத்தை எடுத்து பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார் டைரக்டர்.

அகோரி சாமியார் சங்கராக விஸ்வக் சென், டாக்டர் ஜான்வியாக சாந்தினி செளத்ரி, தேவதாசி துர்காவாக அபிநயா, அவரது குழந்தை உமாவாக ஹரிகா பெட்டா என அனைவருமே நன்றாகத் தான் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் இடைவேளைக்குப் பிறகு, கதையை இழு இழுவென இழுத்து, அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்கெங்கோ சுத்தவிட்டு, நாம் யார்? என நம்மையே கேட்க வைத்துவிட்டார் டைரக்டர். படத்தின் ஜீவநாடி என்றால் அது நரேஷ் குமரனின் பின்னணி இசை தான்.

காரம் தூக்கலான கரம் மசா லா தெலுங்குப் பட டைரக்டர்களுக்கிடையே வித்யாதர் காகிடா, ரொம்பவே வித்தியாசமாகத் தான்  தெரிகிறார். ஆனால் மேக்கிங் ஸ்டைல் ஒன்று மட்டுமே போதாது டைரக்டர் காரு.

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.