போதையும் ஆணாதிக்கத் திமிரும் ஒரு குழந்தையை காவு வாங்கி இருக்கிறது !

குழந்தைகள் மீது நடைபெற கூடிய 90 சதவீத குற்றங்கள் தெரிந்தவர்களால் நடத்தப்படுகிறது. இந்த சம்பவமும் விதிவிலக்கு அல்ல.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போதையும் ஆணாதிக்க திமிரும் ஒரு குழந்தையை காவு வாங்கி இருக்கிறது !

ழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் உடலை போர்வையால் சுருட்டி பாயினை கொண்டு கட்டி சாக்கடையில் வீசி அதன் மீது குப்பை சருகுகளை கொட்டி மது கடைக்கு சென்று நிதானமாக குடித்து இருக்கிறான் 57 வயது நிரம்பிய விவேகானந்தன். இந்த கொலையை அவன் மட்டும் செய்யவில்லை 19 வயது நிரம்பிய கருணாஸ் என்பவனும் சேர்ந்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்டு இருக்கிறான். கடந்த 2 மார்ச் 2024 அன்று காணாமல் போன சிறுமியின் சடலம் நான்கு நாட்கள் கடந்து 6 மார்ச் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. பாண்டிச்சேரி சோலை நகரில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஆதிதிராவிடர் – பறையர் சமூகத்தை சேர்ந்த நாராயணன் – மைதிலியின் இளைய மகள் அரசு ஆரம்ப நிலை பள்ளிக்கூடம் ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டி. நாராயணன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மைதிலி வீடுகளில் தூய்மை பணியில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் ஆரம்ப அரசு சுகாதார நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கடந்த 2 மார்ச் அன்று நாராயணனும் மைதிலியும் வேலைக்கு சென்று உள்ளனர். வீட்டில் மூத்த மகளும் இளைய மகளும் இருந்து உள்ளனர். மாலை 4,30 மணி அளவில் மைதிலி வீட்டுக்கு வந்து பார்த்தபோது இளைய மகளை காணவில்லை. வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வதந்தி அந்த பகுதியில் இருப்பதினால் குழந்தை கடத்த பட்டு இருப்பாளோ என்று பதட்டம் அடைந்த மைதிலி உறவினர்களோடும் தெரிந்தவர்களோடும் இணைந்து தேட ஆரம்பித்து உள்ளார். நாராயணனுக்கும் தகவல் சொல்லப்பட்டது. அவரும் வீட்டுக்கு வந்து உள்ளார். அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. முத்தியால்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் தேடி இருக்கின்றனர். அருகில் இருந்த வீடுகளில் கழிவறை தொட்டிகளில் குடி நீர் தொட்டிகளில் என்று எல்லா இடங்களிலும் தேடி இருக்கின்றனர். அங்கு இருந்த நான்கு சிசிடிவி காமிராக்களின் பதிவுகளை கைப்பற்றியும் ஆராய்ந்து உள்ளனர். நீதிக்காக மக்கள் சாலை மறியலில் ஈடுபட தடியடியும் நடத்தப்பட்டு இருக்கிறது.

சிறுமியின் உடலை போர்வையால் சுருட்டி பாயினை கொண்டு கட்டி சாக்கடையில் வீசி …

உண்மையில் சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 200 அடி தொலைவில்தான் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. முதன்மை குற்றவாளியான விவேகானந்தன் சிறுமியின் பெற்றோர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பால் காரர் என்றுதான் அவரை சொல்லுகின்றனர். அன்று காலை தயிர் வாங்குவதற்கு விவேகானந்தன் வீட்டுக்குத்தான் சிறுமி சென்று இருக்கிறார். தயிர் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தும் இருக்கிறார். காலை சுமார் 11.30 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அன்று காலை 11.40 முதல் – 12.12 க்குள் சிறுமி கொல்லப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு மது கடை ஒன்றில் விவேகானந்தன் மது அருந்துகிற சிசிடி காமிரா பதிவினை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மது அருந்திவிட்டு தன்னுடைய மகள் வீட்டுக்கு சென்று தங்கி இருக்கிறார் விவேகானந்தன். சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளாரா என்கிற கோணத்தில் மருத்துவ பரிசோதனையும் நடந்து உள்ளது. அங்கு இருந்த முடி மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து டிஎன்ஏ பரிசோதனையும் நடந்து இருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கருணாஸ் இந்த கொலையில் ஈடுபட்டானா? சடலத்தை மறைக்க விவேகானந்தனுக்கு உறுதுணையாக இருந்தானா? அதற்கு அவனுக்கு விலை பேசப்பட்டதா? இருவரும் சேர்ந்து கொலையை செய்தார்களா? பாலியல் வன்புணர்வு நடந்ததா? விவேகானந்தனுக்கும் கருணாசுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேங்காய் கயிறு கொண்டு சிறுமியை கட்டினோம் என்று கருணாஸ் கொடுத்த வாக்குமூலம் சரியாக பொருந்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் இருவரும் இணைந்து செய்த சதி குறித்து காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க வேண்டும்.

விவேகானந்தன் தங்கி இருந்த வீட்டின் ஓரம் இருந்த சாக்கடையில்தான் சிறுமி வீசப்பட்டு இருக்கிறார். அந்த வீட்டினை பார்த்தேன். பாழடைந்து தூர்நாற்றமுடன் இருந்தது. அந்த வீடு பாக பிரிவினை தகராறில் உள்ளது. ஏழு பேருக்கு பிரச்னை. அதனால் அந்த வீட்டை விட்டு யாரும் செல்லாமல் அங்கு உள்ளனர். வீட்டில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கிடந்தன. ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டு தனியாக பேசி கொண்டு இருக்கிறார். பார்ப்பதற்கு விகாரமாக இருந்தது.

களத்தில் எவிடன்ஸ் கதிர் குழுவினர்.

கருணாஸ் கடுமையான கஞ்சா குடி. விவேகானந்தன் கடுமையான குடிகாரன். இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை கொன்று விட்டனர். மோப்ப நாய், காவல் உயர் அதிகாரிகள் என்று பெரும் போலீஸ் படை இருந்தும் வீட்டுக்கு அருகாமையில் கிடந்த ஆர்த்தியின் உடலை போலீசார் கண்டுபிடிக்காமல் இருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நம்முடையை போலீஸ் சிஸ்ட்டம் பலவீனமாக இருக்கிறது.

ஏற்கனவே பாண்டிச்சேரி மதுவினால் நிரம்பி வழிகிறது என்றால் தற்போது கஞ்சாவினால் சுடுகாடாக மாறிவருகிறது. நாராயணனும் மைதிலியும் நிலை குனிந்து போய் உள்ளனர். வழக்கின் போக்கு குறித்து கூட அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. போலீசார் கைப்பற்றிய ஆதாரங்கள், சாட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். வழக்கின் நலன் கருதி சில உண்மைகளை இங்கே வெளியிட விரும்பவில்லை.

சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தும் எவிடன்ஸ் கதிர்.

குழந்தைகள் மீது நடைபெற கூடிய 90 சதவீத குற்றங்கள் தெரிந்தவர்களால் நடத்தப்படுகிறது. இந்த சம்பவமும் விதிவிலக்கு அல்ல. போதையும் ஆணாதிக்க திமிரும் ஒரு குழந்தையை காவு வாங்கி இருக்கிறது.கொல்லப்படும்போது அந்த சிறுமி எப்படி எல்லாம் துடித்து இருப்பாள்? நினைத்து பார்க்கவே கனமாகி போகிறது மனசு.

முகநூலில் : எவிடென்ஸ் கதிர்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.