அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் 2022-ல் ரிலீசான படம் ‘காந்தாரா’. அங்கே ரிலீசாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டானதும் தமிழிலும் ரிலீசாகி செம ஹிட்டானது. சுமார் மூன்று கோடி பட்ஜெட்டில் தயாராகி, 100 கோடி கலெக்‌ஷனை அள்ளி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது ‘காந்தாரா’

காந்தாரா சேப்டர்-1’அந்த ‘காந்தாரா’வின் அடுத்த பாகமாக ‘காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ஹொம்பாலே பிலிம்ஸ் மிகமிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போர்க்காட்சிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற 300 நடிகர்கள் மற்றும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்-நடிகைகள் பங்கு பெற்ற மெகா சீன் ஒன்று கர்நாடக மாநிலத்தின் புறநகரில் 25 ஏக்கரில் போடப்பட்ட தத்ரூப செட்டில் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் ஒளிப்பதிவு : அரவிந்த் காஷ்யப், இசை ; அஜ்னீஷ் லோக்நாத், தயாரிப்பு வடிவமைப்பு : விக்னேஷ் பங்லன், பி.ஆர்.ஓ : யுவராஜ்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் அற்புதமான திரைவிருந்தாக தயாராகியிருக்கும் ‘காந்தாரா சேப்டர்-1’-ன் டிரெய்லரை  நம்ம சிவகார்த்திகேயன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

   —  ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.