திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை !
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அவ்வப்போது கைது நடவடிக்கை அதிரடியாக நடக்கின்ற வேளையில் மீண்டும் கஞ்சா வியாபாரி கைது.
திருச்சி காவல் ஆணையர் காமினி பொறுப்பேற்றதிலிருந்து குற்றம் செய்பவர்கள் தடுத்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இருப்பினும் மேலும் ஒருவர் திருச்சி இரட்டைமலை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கஞ்சா விற்ற நபர் ராம்ஜி நகரை சேர்ந்த அசோக் என்பவரது மகன் விக்னேஷ் என தெரியவந்தது. பின்னர் அவர் வசம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், இதில் தொடா்புடைய நபா்களான சக்திவேல் மனைவி பிரேமா மற்றும் சக்தி வேல் என்பவரது மகன் விசு என்ற விஸ்வநாதன் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் மதுவிலக்கு போலீசார் தேடி வருகிறார்கள்.
— பா. பிரபு.