காவல்துறை அதிரடி!! திருச்சியில் மீண்டும் ஒரு கஞ்சா வியாபாரி கைது!!!
திருச்சியில் சமீப காலமாக கஞ்சா பழக்கவழக்கம் அதிகரித்த நிலையில் இதை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை ஆணையர் காமினி அவர்கள் உத்தரவின்படி குற்றப் பின்னணியில் ஈடுபடும் நபர்களை அதிரடி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு போலீஸார் கண்காணித்துக் வரும் நிலையில் தேனி கடமலைக்குண்டு ஆண்டிபட்டியை சேர்ந்த பிச்சை மகன் சிலம்பு ராஜா வயது 36 என்பவரிடமிருந்து சுமார் 8.30 கிலோ எடை கொண்ட 4 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்தனர் மதுவிலக்கு போலீசார்.
இது பற்றி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் தமிழ்நாட்டில் கஞ்சா, கூலி குட்கா தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் பலவிதமான குற்றங்களும் அதிகரித்த உள்ளது. இந்த போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இந்த கைது நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும், இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களை விரைவில் கைது செய்வோம் என்றார்.
— பா. பிரபு.