அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெண் பிள்ளை பிறந்தால் பொன் பிள்ளை பிறந்தது போல !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

எங்கள் குடும்பத்தில் அம்மா அப்பா இருவரும் ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டனர். எனது தந்தை வழி குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக பெண் பிள்ளைகளே கிடையாது.

நான் என்னுடைய அண்ணன் தம்பி மூன்று பேரையும் பார்த்து, எங்கள் அம்மா ஒரு பெண் பிள்ளை இல்லை என்று மிகவும்  வருத்தப்பட்டு அவ்வப்போது சொல்லுவார். எனக்கு அப்போதிலிருந்தே, என் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது ஆசை. நான் நினைத்தது போலவே முதல் குழந்தையாக இல்லை தேவதையாக லக்ஷனா எங்களுக்கு பிறந்தாள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மதிப்பெண் பட்டியல்அவள் பிறந்த அவ்வருடமே நாங்கள் இருவரும் மேற்படிப்புக்கு சென்ற காரணத்தினால் எனது தாயிடம் வளர்ந்தாள். பெண் பிள்ளை இல்லாத குறையை பேத்தியை வளர்த்து என் அம்மா தீர்த்துக் கொண்டார்கள்.

அவள் பள்ளிக்கு சென்ற நாள் முதல் இன்று பத்தாம் வகுப்பு முடித்த நாள் வரை நானோ, மனைவியோ ஒரு நாள் கூட அவள் அருகில் சென்று, “நீ என்ன படிக்கிறாய்?” என வினவியதில்லை. அவளாக படிப்பாள்.  மதிப்பெண்கள் வரும். ஆசிரியர் பெற்றோர் கலந்தாய்வுக்கு செல்வேன். அங்கே அவர்கள் lakshanaa நன்றாக படிக்கிறாள் என்று கூறுவார்கள். வந்துவிடுவேன்.

யாவரும் கேளீர்

நான் இப்பொழுது சமூகத்தில் ஒரு நல்ல மருத்துவராக இருக்கலாம். ஆனால், பள்ளிப் பருவத்தில் நான் ஒரு சீரிய மாணவன் கிடையாது. நான் செய்யும் தவறுகளுக்கெல்லாம் எனது தந்தையை ஆசிரியர்கள் கூப்பிட்டு வைத்து திட்டி அனுப்புவார்கள். ஆனால், எங்கள் பிள்ளையோ எனக்கு நேர் மாறாக இருக்கிறாள்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

Dr. கு. அரவிந்தன்
Dr. கு. அரவிந்தன்

நான் மதிப்பெண்ணை வைத்து ஒரு மாணவனை எடைபோடும் சராசரி ஆள் கிடையாது. ஆனால், எனது மகளை இப்பதிவின் மூலம் வாழ்த்துவது மதிப்பெண்ணுக்காக அல்ல. எத்தனையோ பெற்றோர்கள் நாளும் கிழமையும் கூடவே நேரம் செலவழித்து அவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையாக எங்கள் செல்ல மகள் எப்படி படிக்கிறாள் என்று கூட பார்க்க மாட்டேன். அவ்வாறு இருந்தும் ஒரு மகளாக எங்களை பெருமைப்பட வைத்திருக்கிறாள் இன்று.

அவளின் புகைப்படத்தை நான் இங்கே பார்த்த பொழுது, என் மனம் ஒன்றை மட்டும் கூறியது. Lakshanaa எங்களால், உனக்கு பெருமை இல்லை. உன்னால் தான் எங்களுக்கு பெருமையென நீ உணர்த்திவிட்டாய் என்று.

எங்களது பெண்பிள்ளை அல்ல அவள். எங்களது பொன் பிள்ளை அவள். இதற்கு மேல் நீ என்னவாக வேண்டுமானாலும் ஆகிக்கொள். இதைவிட பெருமை எங்களுக்கு வேறில்லை!

இப்படிக்கு உன் தந்தை Dr. கு. அரவிந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.