அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் மன உறுதி…!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திண்டுக்கல் சென்று கொண்டிருந்த பேருந்தில்  திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் வெற்றிவேல் மிகுந்த சிரமத்திற்கு இடையிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காகப் பேருந்தை நிறுத்திய  நிகழ்வு பாராட்ட கூடியது.

பேருந்தை இயக்கும்போது ஓட்டு நருக்குத் திடீரென உடல் நலக்குறைவு (மயக்கம் ) ஏற்பட்ட போது ஓட்டுனர் உடனே சிறிதும் யோசிக்காமல் இடது பக்கத்தில் இருந்த ஒரு காட்டுப்பகுதிக்குள், கம்பி வேலியை உடைத்து பேருந்தை செலுத்தினார். சில தூரம் சென்ற பின் பேருந்து நின்றதும், அவர் சீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பேருந்து ஓட்டுநா்
பேருந்து ஓட்டுநா்

2026 June 11 - 17 Angusam Book

தமக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தபோதும், நிலைதடுமாறாமல் பயணிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், அந்த ஓட்டுநர் பேருந்தைச் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். அவர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இது போன்ற சம்பவங்கள், ஓட்டுநர்களின் மன உறுதியையும், பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குப் பணி நேரத்தில் இது போன்ற மாரடைப்பு அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் நிகழ்வுகள் அவ்வப்போது பதிவாகின்றன.

பெரும்பாலும், அவர்கள் அந்த கடைசி வினாடி வரை பயணிகளின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதி செயல்படுகின்றனர். பலரின் உயிரை காப்பாற்றிய அந்த டிரைவர் அண்ணாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

—    அய்யாரப்பன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.