கண்ணுக்குள் சென்ற சுருள் கம்பி ! பார்வை இழப்பின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை !
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை அடுத்த இ.கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார், சுகன்யா தம்பதியினரின் 10 வயது மகன் அஹன் கடந்த 3 ஆம் தேதி வீட்டில் ரிமோட் காரை வைத்து விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரிமோட் ஆண்டனாவில் இருந்த கம்பி வலது கண்ணுக்குள் சென்றுள்ளது. முதல்கட்டமாக உள்ளூரில் உள்ள மருத்துவமனைகளில் கண்ணில் உள்ள கம்பியை அகற்ற முயற்சித்த போது மேலும் சிக்கலானது சுருள் கம்பியாக கண்ணுக்குள் இருந்ததால் மருத்துவர்கள்ஆலோசனைபடி மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

6மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கண் அறுவை சிகிச்சைக்கு பின் பார்வை இழப்பின்றி சுருள்கம்பி அகற்றப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்கிற 50 வயது முதியவர் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டபோது குச்சி இடது கண்ணுக்கு கீழ் குத்தி மூளைக்கு சென்றது.
தேனி மருத்துவக்கல்லூரியில் முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்ட பின்னர் முருகன் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நரம்பியல் துறை மருத்துவர்கள் உதவியுடன் உடனடியாக அறுவைசிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் முருகன் கண்ணுக்கு கீழ் இருந்த 6.7 செ.மீ அளவிலான குச்சி அகற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர் கூறுகையில், சிக்கலான கண் அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மேற்க்கொண்டு உள்ளது. கண்ணில் பாதிப்புகள் ஏற்பட்டால் நாமே அதை சரி செய்ய முயற்சிக்காமல் மருத்துவசிகிச்சை வழியாக தீர்வுகாண வேண்டும் என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.