அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் ரவுண்டானா அருகே இன்று அதிகாலை துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வடிவேல், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெரம்பலூரில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றபோது காரில் வந்த மர்மநபர்கள் போலீசாரை கண்டதும் காரை லாக் செய்துவிட்டு இறங்கி தப்பி ஓடி உள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

குட்கா பொருட்கள் பறிமுதல்!இதை அடுத்து ரெக்கவரி வேன் மூலம் காரை காவல் நிலையம் எடுத்து வந்த போலீசார் கார் லாக்கை உடைத்து உள்ளே பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 57 மூட்டைகளில் 472 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வாகனத்தின் எண்னை சோதனை செய்த போது அது போலியானது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Admission Enquiry Form

குட்கா பொருட்கள் பறிமுதல்!இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

472 கிலோ குட்கா பொருட்கள் காரில் கடத்தி வந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.