வில்லன்கள் இல்லாத ‘ஹாய்’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘ஹாய்’ வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு : பிலோமின் ராஜ், கலை இயக்கம்: எஸ். கண்ணன், பிஆர்ஓ: யுவராஜ்

ஜீ ஸ்டுடியோஸ்,  ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசும் போது,

“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். வில்லன்கள் இல்லாத படம் இது” என்கிறார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.