அங்குசம் பார்வையில் ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன் ‘ படம் எப்படி இருக்கு ! ..
அங்குசம் பார்வையில் ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன் ‘ படம் எப்படி இருக்கு ! ..
தயாரிப்பு: ‘ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்’ கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி. டைரக்டர்: செல்வின் ராஜ் சேவியர். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சதீஷ், ரெஜினா கஸாண்ட்ரா, நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், எல்லி அவ்ரம், ஜேசன் ஷா, பெனடிக்ட் கார்ரெட், ஆனந்தராஜ், நமோ நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர். இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: எஸ்.யுவா, ஆர்ட் டைரக்டர்: மோகன மகேந்திரன், எடிட்டிங்: பிரதீப் இ.ராகவ், மேக்கப்: பட்டணம் ரஷீத், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் மாணிக்கம். பிஆர்ஓ: நிகில் முருகன்
மோட்டார் ரிப்பேர் ஆகி வீட்டு பைப்பில் தண்ணீர் வராததால், புழக்கடை பக்கம் இருக்கும் பழைய கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கிறார் சதீஷ். அப்போது மாந்த்ரீக வளையமும் அதனுடன் ஒரு பில்லி சூன்ய மரப்பொம்மையும் வாளியில் வருகிறது. அதை வினோதமாகப் பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு சிறகையும் பிய்த்துவிட்டு மீண்டும் கிணற்றுக்குள்ளேயே போட்டு விடுகிறார் சதீஷ்.
அதன் பின்னர் அவர் தூங்கும் போது ஒரு கனவு, அந்த கனவில் ஒரு பெரிய பங்களா, அந்த பங்களாவில் ஒரு பெண் பேய். இதுவே மறுநாளும் வரும் போது, கனவில் நெத்தியில் காயம் ஏற்படுகிறது, சட்டையும் கிழிகிறது சதீஷ்க்கு. திடுக்கிட்டு முழித்துப் பார்த்தல் நிஜத்திலும் காயம். இதனால் மிரண்டு போய் பேய் ஆராய்ச்சியாளர் நாசரை சந்தித்து நடந்ததை சொல்கிறார் சதீஷ். அந்த சிறகை பிய்த்ததால் தான் இம்புட்டும்.
நீ தூங்கும் நேரத்தில் கனவு வரும், பேயும் வரும். கனவில் நடப்பது நிஜத்திலும் நடக்கும். அந்த கனவில் வரும் பங்களாவுக்குள் ஒரு சாவி இருக்கு. அந்த சாவியை நீ கண்டுபிடித்தால் தான் இந்த கனவுக்கு முடிவு வரும். அதேபோல் அந்த சிறகை யார் பிய்த்தாலும் இந்த கனவும் பேயும் வரும் என திகிலூட்டுகிறார் நாசர்.
நாசரின் அசிஸ்டெண்ட் ரெஜினா கஸாண்ட்ரா மூலம் ஃப்ளாஷ் பேக் ஓப்பன் ஆகிறது. அதில் 1930 பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் மதறாஸில் அந்த பங்களாவில் வசிக்கும் இளவரசி மீது காதல் கொள்கிறான் ஒரு ராணுவ வீரன். இது மேஜருக்கு பேஜாராகி இம்சை கொடுக்கிறான். அந்த மேஜரை காலி பண்ண மாந்த்ரீகனை அழைத்து வருகிறான் வீரன்.
இதன் மூலம் கனவுலகில் வாழ்கிறார்கள் இளவரசியும் வீரனும். இதையும் தெரிந்து கொண்டு அங்கேயும் வந்து லவ் ஜோடியையும் மாந்த்ரீகனையும் குளோஸ் பண்ணுகிறான் மேஜர். அந்த பங்களா இருந்த இடத்தில் தான் சதீஷின் வீடு இருக்கு. அந்த மாந்த்ரீக வளையமும் அதனுடன் சேர்த்து கட்டிய மர பொம்மையும் தான் கிணற்றில் இருந்து வந்தது.
இப்படி கனகச்சிதமாக கதையைப் பிடித்து காமெடியையும் திகிலையும் கரெக்டா ஸ்கிரிப்டில் பிக்ஸ் பண்ணி இரண்டேகால் மணி நேரம் போவதே தெரியாமல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கார் டைரக்டர் செல்வின் ராஜ் சேவியர். சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், நமோ நாராயண், ரெடின் கிங்ஸ்லி என வரிசையாக அந்த சிறகைப் பிய்த்த பின்னர் நடக்கும் காமெடி சடுகுடு ஆட்டம் சூப்பர் ஆட்டம். இதுவரை பெரிய ஹீரோக்களுடன் ஜாயிண்டாகி காமெடி வண்டியை ஓட்டி வந்தார் சதீஷ். இதில் சோலோவாக காமெடி வண்டியை ஓட்ட களம் இறங்கியிருக்கிறார். அதனால் ரொம்பவே திணறியிருக்கிறார்.
ஓவர் லோடுக்கு அவர் பாடி தாங்கல போல. சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ஆனந்த ராஜ் ஆகியோர் கூட்டணி தான் இந்த காஞ்ஜுரிங் கண்ணப்பனை( சதீஷ்) காப்பாற்றி கரை சேர்த்திருக்குன்னே சொல்லலாம்.
ஆனந்த ராஜ் அண்ணே.. ஒடம்பு ஓவரா பெருத்துக்கிட்டே போகுது. பார்த்துக்கங்கண்ணே. மியூசிக் பெர்ஃபாமென்ஸ் ஹீரோன்னா நம்ம யுவன் சங்கர் ராஜா தான்.அடேங்கப்பா… பேக் ரவுண்ட் ஸ்கோரில் திகில் கிளப்பி பின்னிட்டாரு மனுசன். இதற்கடுத்த சூப்பர் ஹீரோ ஆர்ட் டைரக்டர் மோகன மகேந்திரன் தான்.
அந்த பங்களா செட்டும் மாந்த்ரீக வளையமும் சரியா கனெக்ட் பண்ணிட்டார். ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன் ‘ இரண்டேகால் மணி நேர டைம் பாஸுக்கு கன்பார்ம் க்யாரண்டி.
–மதுரை மாறன்