அங்குசம் பார்வையில் ‘அவள் பெயர் ரஜ்னி ‘ படம் எப்படி இருக்கு ?               

0

அங்குசம் பார்வையில் ‘அவள் பெயர் ரஜ்னி ‘ படம் எப்படி இருக்கு ?               

தயாரிப்பு: நவரசா ஃபிலிம்ஸ் ப்ளெஸ்ஸி & ஸ்ரீஜித் ப்ளெஸ்ஸி. டைரக்டர்: வினில் ஸ்கரியா வர்கீஸ். நடிகர் -நடிகைகள்: காளிதாஸ் ஜெயராம், நமீதா ப்ரமோத், ரெபா மோனிகா ஜான், அஷ்வின் குமார், சைஜு க்ரூப், ரமேஷ் கண்ணா, கருணாகரன் . வசனம்: வின்சென்ட் வடக்கன் & டேவிட் கே.ராஜன், ஒளிப்பதிவு: ஆர்.ஆர்.விஷ்ணு, எடிட்டிங்: தீபு ஜோசப், இசை: 4 மியூசிக்ஸ், ஆர்ட் டைரக்டர்: ஆஷிக், மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர். பிஆர்ஓ: சதிஷ் ( Aim)

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

ஒரு இரவு நேரம். சைஜூ க்ரூப்பும் அவரது மனைவி நமீதா ப்ரமோத்தும் காரில் போகிறார்கள். டீசல் இல்லாமல் கார் நின்று போக, பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கப் போகிறார் சைஜூ. காரில் அமர்ந்திருக்கிறார் நமீதா ப்ரமோத்.

அப்போது காரின் மேல் பகுதியிலிருந்து பலமான தாக்குதல் நடந்து காரின் சைடு கண்ணாடி வழியே ரத்தம் வழிகிறது. காரின் மேல் பகுதியில் பிணமாக கிடக்கிறார் சைஜூ.அலறியபடி இருக்கும் நமீதாவை நான்கு இளைஞர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள்.

- Advertisement -

அவள் பெயர் ரஜ்னி
அவள் பெயர் ரஜ்னி
4 bismi svs

அதன் பின் போலீஸ் விசாரணை நடக்கிறது. தனது அக்கா நமீதாவின் கணவரைக் கொன்றது யார்? என கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் காளிதாஸ் ஜெயராம். அதன் பின்னர் நடக்கும் பக்காவான க்ரைம் ஆட்டம் தான் இந்த ‘அவள் பெயர் ரஜ்னி ‘.

வழக்கமான பழி வாங்கும் படங்கள் போல இல்லாமல் டோட்டலாக வேற ஜானரில் கதையைப் பிடித்து, அதன் இயல்பான போக்கிலேயே திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போய் நல்ல ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்கரியா வர்கீஸ்.

இந்த மாதிரியான திரைக்கதையை கட்டமைப்பதில் மலையாள சினிமா இயக்குனர்கள் கில்லாடிகள் தான். ஹீரோயிசம் துளியும் இல்லாத இந்த கதைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார் காளிதாஸ். தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக இன்ஸ்பெக்டர் அஷ்வின் குமார் சொல்லும் இடத்தில், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சியிலும் தனது தம்பி காளிதாஸிடம், “இதுக்கு கிளாரிட்டி வேணும் ” என குமுறுவதிலும் ரஜ்னியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதிலும் செமத்தியாக அசத்தியிருக்கிறார் நமீதா ப்ரமோத்.

இன்ஸ்பெக்டராக வரும் அஷ்வின் குமார் செம மிடுக்கு. படத்தின் ஹீரோ & ஹீரோயின் என்றால், திருநங்கையாக ரஜ்னி கேரக்டரில் நடித்துள்ள பிரியங்கா சாய் தான். அப்பா…என்ன ஒரு ஆவேசம், ஆங்காரம். இதற்கு அடுத்து கேமரா மேனும் எடிட்டரும் தான் ரஜ்னிக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்கள். காளிதாஸை நாய்கள் துரத்தும் அந்த நைட் எஃபெக்ட் சீனில் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் புகுந்து விளையாடியிருக்கார் கேமரா மேன் விஷ்ணு.

ரஜ்னியின் ஃப்ளாஷ் பேக்கை பூ ராமு காளிதாஸிடம் சொல்வது, பிரியங்கா சாயே நமீதா விடம் சொல்லது என இரண்டையும் சேர்த்து கட் பண்ணி கட் பண்ணிக் காட்டி ரசிக்க வைக்கிறார் எடிட்டர் தீபு ஜோசப். 4 மியூசிக் இசையும் கதைக்கு தேவையான இடங்களில் நச்சுன்னு பொருந்துகிறது. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆழமாக நேசித்திருக்கிறார் டைரக்டர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.

 ‌– மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.