அங்குசம் செய்தி எதிரொலி : திறந்து விட்டாச்சு – இலால்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி – இலால்குடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி போயிருப்பதையும் இதனால், வியாபாரிகள், பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

பெயருக்குத்தான் புதிய பேருந்து நிலையமே தவிர, பழைய பேருந்து நிலையத்தை சுற்றித்தான் வணிக கடைகள், உணவகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது அதிரடியாக நிறுத்தப்பட்டதால், ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரத்துக்கு புதிய பேருந்து நிலையத்துக்கு நடந்தே செல்ல வேண்டிய சிக்கலை பயணிகளும், மாணவர்களும் எதிர்கொண்டு வந்தனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த பின்னணியில்தான், தற்போது பள்ளி திறக்கும் – முடியும் நேரங்களில் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும்; மீண்டும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்லும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும்போது எதிர்கொள்ளும் வழக்கமான நடைமுறை சிக்கல்தான் இது என்றபோதிலும், புதிய பேருந்துநிலையம் அதன் முழுமையான அர்த்த்தில்  பயன்பாட்டிற்கு வரும் வரையில் குறைந்தபட்சம் டவுன் பஸ்களை மட்டுமாவது, நேரகட்டுப்பாடு இன்றி வழக்கம் போல, பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கிறார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

–       சதா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.