சிறைகளில் – தொலைக்காட்சி – ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் ! சிறை கைதிகளுக்கான ஒரே பொழுதுபோக்கு வாரந்தோறும் திறந்தவெளி மைதானத்தில் வெண்திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே. கொரோனா தொற்றுப்பரவலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்த சமயத்தில், சிறை வளாகத்தில் கைதிகளை ஒரே இடத்தில் குவிப்பது தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் வெண்திரை சினிமாவுக்கும் சிக்கல் வந்தது.

மாற்று ஏற்பாடாக, சிறை வளாகம் எங்கும் அறைகள் தோறும் எல்.இ.டி. டி.வி.க்களை நிறுவியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் பத்து கைதிகள் தங்கும் அறையாக இருந்தாலும், அங்கே கண்டிப்பாக ஒரு எல்.இ.டி. டி.வி. இடம்பெற்றிருக்கும் என்பதெல்லாம் சிறைவாசிகளே எதிர்பார்த்திராத ஒன்று.

அங்குசம் இதழ்..

 ஜெயில் பரிதாபங்கள் - தொடர் - 5
ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

காலை 6 மணிக்கு ஒருமுறையும் திரும்ப மாலை 5 மணிக்கு ஒருமுறையும் அறைகள் தோறும் கைதிகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் போலீசார், காலையில் கதவை திறந்துவிட்டு, மாலை கதவை தாழிட்டு செல்வது வழக்கமான நடைமுறை. மாலை சிறைக்கதவுகள் தாழிடப்படுவதற்கு சற்று முன்பாகவே, தொலைக்காட்சிகள் இயங்க ஆரம்பித்துவிடும். இரவு 9.30 மணிக்கெல்லாம் அணைக்கப்பட்டுவிடும். நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் தொலைக்காட்சியை கண்டு ரசிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு கிடைத்த வரையில் எல்லாமே சுபம்தான்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதேசமயம், சிறைக் கைதிகளின் புத்துணர்ச்சிக்காகவும், அவர்களது மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் நிறுவப்பட்டிருக்கும் தொலைக்காட்சிகளே, சிறைக்கைதிகளை ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

உதாரணத்திற்கு, திருச்சி மத்திய சிறையில் சிறை வளாகம் முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் எல்.இ.டி. டி.வி. க்கள் அனைத்தையும் இயக்கும் பொறுப்பு ஒரு போலீசாருடையது. எக்காரணத்தைக் கொண்டும் செய்தி சேனலை மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி இல்லை. சினிமா பாடல்களும், திரைப்படங்களும்தான் எப்போதும் ஒளிபரப்பாகும். ஐ.பி.எல்., உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில், கிரிக்கெட் மேட்ச்சுகளை ஒளிபரப்புவார்கள். சனிக்கிழமைகளில், மதியம் 2 மணி முதலாகவே தொலைக்காட்சி சேவை ஆரம்பமாகிவிடும். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கே சினிமா பாடலோடு தொடங்கி ஞாயிறு சிறப்பு திரைப்படம் வரையில் களைகட்டும்.

 ஜெயில் பரிதாபங்கள் - தொடர் - 5
ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

இதில் சிக்கல் என்னவென்றால், செய்தியையும் ஆபாசத்தையும் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதற்கு மட்டும்தான் சிறை நிர்வாகம் தடை விதித்திருக்கிறதேயொழிய, சிறை கைதிகளுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஆக்கப்பூர்வமான இன்னின்ன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யலாம் என்பதாக எந்த ஒரு திட்டமும் அவர்களிடம் இல்லை என்பதுதான். ஒளிபரப்பு செய்யும் பணி ஒதுக்கப்பட்ட போலீசாரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, சேனல்கள் மாறிக்கொண்டேயிருக்கும். சில சமயங்களில், தண்டனை கைதிகளின் கட்டுப்பாட்டில் ரிமோட் இருக்கும்பட்சத்தில் அவரது மன ஓட்டத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மிக முக்கியமாக, மாலை 5 மணிக்கு சேவையைத் தொடங்கும் சமயத்தில், ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஏற்கெனவே தொடங்கிய சினிமா ஒன்று ஒளிபரப்பாகும். அந்த சினிமாவின் கிளைமேக்ஸ் முடிவதற்குள்ளாக, அடுத்த சேனலுக்கு மாறும். அல்லது, தொடக்கம் முதலாகவே ஒரு திரைப்படத்தை பேரார்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள், அந்த திரைப்படம் முழுமையாக முடிவடைய 10 நிமிடங்கள்தான் பாக்கி இருக்கிறது என்றால்கூட, சிறை விதிப்படி 9.30 மணிக்கெல்லாம் டி.வி.யை அணைத்துவிடுவார்கள். ஐ.பி.எல். சீசன் நாட்களில் ஒரு போட்டியை முழுமையாக பார்க்கவே முடியாது என்ற சிக்கலை சந்திப்பார்கள் சிறைக்கைதிகள்.

ஜெயில் பரிதாபங்கள் - தொடர் - 5
ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

பல நேரங்களில், கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையும், கிரிக்கெட் மேட்சில் யார் ஜெயித்தார்கள்? என்ற பேரார்வமுமே அவர்களின் இரவு உறக்கத்தை கெடுத்துவிடும். மறுநாள், சிறைக்கு வெளியிலிருந்து பணிக்கு உள்ளே வரும் ஏதேனும் ஒரு போலீசாரை பிடித்து, மேட்சில் யார் ஜெயித்தார்கள் என்று கேட்டுத் தெரிந்தபிறகே, அவர்களது சிந்தை தெளியும்.

ஒருமுறை சிறை வழக்கப்படி, கைதிகளின் குறைகளை கேட்டறிவதற்காக கண்காணிப்பாளர் கைதிகளை சந்தித்து உரையாடிய தருணத்தில், இந்த சிக்கலை முன்வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம், கிரிக்கெட் நடைபெறும் நாட்களிலாவது அந்த ஆட்டம் முழுமையாக முடிவடையும் வரையில் ஒளிபரப்ப வேண்டுமென்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குறைந்தபட்சம், இந்தியா அல்லது சென்னை சி.எஸ்.கே. விளையாடும் போட்டிகளையாவது முழுமையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதாகவும் முன்வைத்திருக்கிறார்கள். அதுவும், மற்ற கைதிகளின் தூக்கம் கெடாதவாறு, இரவு 10 மணிக்கு மேல், சவுண்டை வேண்டுமானாலும் மியூட் செய்துவிடுங்கள் என்பதாகவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அதுவரை பொறுமையாக கேட்ட சிறைகண்காணிப்பாளர், “டெய்லி நைட் எத்தனை மணி வரைக்கும் டி.வி. ஓடுது”னு போலீசாரிடம் கேட்க. “இரவு 10 மணி வரையில்” என்பதாக போலீசார் பதில் சொல்ல. ”இனி, 9.30 மணிக்கெல்லாம் டி.வி.யை அணைத்துவிட வேண்டும்.” என்று கறாராக சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார். புதிய கோரிக்கை வைக்கப் போன இடத்தில், அதுவரையில் நடைமுறையில் இருந்ததிலிருந்து அரை மணி நேரத்தையும் இழந்துவிட்டோமே என்ற துக்கத்தில் திரும்பியிருக்கிறார்கள் சிறை கைதிகள்.

ஜெயில் பரிதாபங்கள் - தொடர் - 5
ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் பொதுவில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்பதற்கும் அப்பால், குறிப்பான இந்த ஓவரில் யார் சிக்சர் அடிப்பார்கள்? யார் விக்கெட் விழும்? என்பதாக ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு “பந்தயம்” வைத்து விளையாடும் அளவுக்கு சிறை கைதிகளுக்குள் சூதாட்டமாகவே மாறிவிட்டதுதான். பீடியை பணயமாக வைத்துதான் இந்த விளையாட்டே. இது சிறை கைதிகளுக்குள் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்கிவிடும் என்பதிலிருந்தே, கைதிகளின் கோரிக்கையை நிராகரித்ததோடு, நேரத்தையும் குறைத்துவிட்டார் சிறை கண்காணிப்பாளர்.

இதுஒருபுறமிருக்க, ஒரு முறை ஒளிபரப்பான திரைப்படமே அதே மாதத்தில் குறைந்தது இரண்டு மூன்றுமுறை சலிப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகும். அதிலும் குறிப்பாக, விஜய் டக்கர், கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சிறையை தகர்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்ற திரைப்படங்கள் தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிற கொடுமையும் உண்டு.

கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு, செய்தியை தவிர்த்து மற்ற சேனலை மாற்றுவது மட்டுமே வேலை என்பதாகவே சிறை நிர்வாகம் இந்த விவகாரத்தை தட்டையாக அணுகி வருகிறது என்பதுதான் இதில் மையமான சிக்கல். சிறை கைதிகளின் பொழுதுபோக்கிற்காக என்ற அளவில் அல்லாமல், ஆக்கப்பூர்வமானதாகவும் அமையும் வகையில் இந்த விசயத்தை அணுக வேண்டும் எல்லோரது எதிர்பார்ப்பும்.

ஜெயில் பரிதாபங்கள் - தொடர் - 5
ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5

குறிப்பாக, சிறைக்குள் நீதி போதனைகள் குறித்த அமர்வுகள் அரிதாகிவிட்ட நிலையில், குறைந்பட்சம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம், நீயா? நானா? போன்ற விவாத நிகழ்ச்சிகள்; சூப்பர் சிங்கர் போன்ற தனித்திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள்; ஆளுமைகளின் நேர்காணல்கள்; குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளை சொல்லும் காட்சித் துணுக்குகள்; யோகா; இயற்கை எழில் சார்ந்த நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் ஜியாகரபி தொலைக்காட்சியின் நிகழ்வுகள் என எவ்வளவோ நல்ல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் தொலைக்காட்சிக்கென்று ஒதுக்கியிருந்தாலும், அந்த நான்கு மணிநேரத்தை அரை மணிநேர ஸ்லாட்டுகளாக பிரித்தால் கூட, நாளொன்றுக்கு எட்டு வகையான நிகழ்வுகளை ஒளிபரப்ப முடியும்.

இப்பொழுதெல்லாம், மூன்று நாளுக்கு முன்பு ஒளிபரப்பான சீரியலைக்கூட டி.வியிலேயே ரெக்கார்ட் செய்து நேரம் கிடைக்கும்போது, திரும்ப போட்டுப் பார்த்துக்கொள்ளும் வசதியெல்லாம் வந்து எத்தனையோ யுகங்கள் ஆகிவிட்டது. அந்த முறையில்கூட, அன்றைய நாளில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து பல்சுவை நிகழ்வுகளின் கதம்பாகவும்கூட ஒளிபரப்பு செய்யலாம்.

இவற்றையெல்லாம்விட மிக முக்கியமாக, சிறை வளாகத்தில் செயல்படும் மொத்த தொலைக்காட்சிகளையும் கண்காணித்து இயக்கும் பொறுப்பில், “சேனலை மாற்றுகிற வேலைதானே” என்ற வகையில் அமர்த்தப்படும் சிறைக்காவலரைக் கொண்டு இந்த நோக்கம் ஈடேற வாய்ப்பில்லை என்பதுதான்.

சிறை பயணம் தொடரும் ! 

 

இதையும் படிங்கள்

சிறைவாசிகளின் நேர்காணல் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 1

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.