“வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030”
திருச்சி புனித வளனார் கல்லூரியில் வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030″ என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள் (ஆகஸ்ட் 27, 2025-செப்டம்பர் 2, 2025) தினமும் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.
இதின் பங்கேற்பாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து இணைப் பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள், முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்கிறார்கள். வருகின்ற 27 ஆகஸ்ட் 2025 அன்று துவக்க விழாவும் 2 செப்டம்பர் 2025 அன்று நிறைவு விழாவும் நடைபெறுகிறது.
இத்தகைய பயிற்சி மற்றும் கற்றல் பயிலரங்கை டாக்டர்.S.ஜோசப் சேவியர், முன்னாள் துணை முதல்வர் மற்றும் துறைத்தலைவர், மேரி மாதா கல்லூரி, தேனீ அவர்கள் துவக்கிவைத்து பேசுகிறார். இத்தகைய அமர்வுகளில் மிகச்சிறந்த நிபுணர்கள் வட்டப்பொருளாதாரம் குறித்த விவாதங்களை எடுத்துரைப்பார்கள்.
இவ்விழாவில் புனித வளனார் கல்லூரியின் முதல்வர் Dr.மரியதாஸ் தலைமை தாங்குகிறார். இதன் நிறைவு விழா உரையை கல்லூரி அதிபர் Dr.பவுல்ராஜ் மைக்கேல் SJ மற்றும் வாழ்த்துரையை கல்லூரியின் செயலர் Dr. ஆரோக்கியசாமி சேவியர் SJ, முதல்வர் Dr.மரியதாஸ் SJ மற்றும் இணை முதல்வர் Dr. குமார் வழங்குகிறார்கள்.