வானத்தை வசப்படுத்திய ‘இந்தியன்-2’ புரமோவில் புதிய புரட்சி
வானத்தை வசப்படுத்திய ‘இந்தியன்-2’ புரமோவில் புதிய புரட்சி ! – லைக்கா நிறுவனத்தின் மெகா பட்ஜெட் தயாரிப்பில் ஸ்டார்ஸ் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன்-2’ வருகிற 12-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. ஒரிஜினல் பான் இந்தியா படமான இந்தியன் 2 புரமோஷனை கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் அமர்க்களமாக ஆரம்பித்தது லைக்கா.
இதைத் தொடர்ந்து மும்பை, சிங்கப்பூர், மலேசியா என பறந்து, பறந்து புரமோவில் கலந்து கொண்டு அமர்க்களப் படுத்தினார்கள் ‘இந்தியன் -2’ படக்குழுவினர். இந்த வரிசையில் இப்போது வானத்திலும் புரமோ புரட்சி நடத்தியுள்ளது லைக்கா.
துபாய் பாம் சுமைரா கடல் பகுதியில் ‘ஸ்கை டைவ் ‘ சாகச வீரர்கள் கிளைடர் விமானத்தில் இருந்து பாராசூட் டில் குதித்து ‘ இந்தியன் 2’ பட போஸ்டரை வானில் பறக்கவிட்டு மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
அடுத்த அதிரடி புரமோ இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடக்கலாம்.
வீடியோ லிங்