அமெரிக்க டாலரை விட இந்தியாவின் ரூபாய் சிறந்தது; கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்திய ரூபாய் குறித்து எளிய வார்த்தைகளில் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் விளக்கியிருக்கிறார்.

அமெரிக்க பெண்ணின் வீடியோ!கிறிஸ்டன் தனது வீடியோவில் “ரூபாய் உண்மையில் அரை விட சிறந்ததா? இந்தியாவில் வாழ்வது எவ்வளவு மலிவானது என்று பேசும்போது, வாங்கும் திறன் (Purchasing Power Parity – PPP) குறித்து சொல்ல வேண்டும். இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அமெரிக்காவை விட மிகவும் குறைவு. அதாவது, இந்தியாவில் ஒரு ரூபாய், அமெரிக்காவில் ஒரு டாலருக்கு சமமான மதிப்பை விட அதிகமான பொருட்களை வாங்க முடியும். இதனால்தான் வாங்கும் திறன் பரிமாற்ற விகிதத்தில் ரூபாய் டாலரை விட உயர்ந்து காணப்படுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அமெரிக்க பெண்ணின் வீடியோ!அமெரிக்காவில் வருமானம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அங்கு எல்லாமே விலை உயர்ந்தவை. இந்தியாவில் வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் குறைவு. உதாரணமாக இந்தியாவில் ஒரு முடி வெட்டுதலுக்கு சராசரி விலை 100 ரூபாய் ஆகும். ஆனால், அமெரிக்காவில் இதன் சராசரி விலை 40 டாலர்கள் (3,400 ரூபாய்) ஆகும். அதாவது அமெரிக்காவில் ஒரு முடி வெட்டுதலுக்கு செலவழிக்கும் பணத்தில் இந்தியாவில் 34 முடி வெட்டுதல்களைப் பெறலாம்” என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறது.

 

—    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.