சிறார்களின் காயங்கள் எவ்வளவு ஆழமானவை ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

குழந்தைகளுக்கான இலக்கியங்களைப் பெரும்பாலும் பெரியவர்கள்தான் எழுதுகிறார்கள். அதேபோல், குழந்தைகளுக்கான திரைப்படங்களையும் பெரும்பாலும் பெரியவர்கள்தான் இயக்குகிறார்கள். அந்த வகையில், சிறார்களுக்கான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ‘பத்தா’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

பாலாஜி தரணிதரன், பத்தாவுக்கும் சிறுவன் சபரிக்கும் இடையிலான நட்பை ஏனோதானோவென்று உருவாக்கவில்லை. நகைச்சுவை, நெகிழ்ச்சி, உணர்வுபூர்வமான தருணங்கள் என இயல்பான காட்சிகளின் வழியே அந்த நட்பை மெல்ல மெல்ல வளர்த்தெடுக்கிறார். அதனால்தான் அவர்களுக்கிடையேயான உறவு பார்வையாளர்களுக்கும் இயல்பாகவும் நெருக்கமாகவும் தோன்றுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சிறுவயதில் பலராலும் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அனைவரையும் அடித்தால்தான் நம்மை மதிப்பார்கள் என்று நம்பி, காலப்போக்கில் ரவுடியாக மாறுகிறான். இந்த மாற்றத்தை ஒரு பெரிய விளக்கமாகச் சொல்லாமல், சபரி என்ற சிறுவனின் பார்வையிலும் அவனுடனான உறவின் வழியாகவும் திரைப்படம் இயல்பாகச் சொல்கிறது.

ஒரு சிறுவனின் மனதில் ஏற்படும் காயங்கள் எவ்வளவு ஆழமானவை? ‘யாராவது என்னைத் தட்டிக்கொடுக்க மாட்டார்களா? என்னையும் பாராட்ட மாட்டார்களா?’ என்று ஏங்கும் ஒரு குழந்தைக்கு கிடைக்காமல் போகும் சிறு அங்கீகாரம்கூட, அவனது மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தலாம். அந்தக் காயங்களோடு வளரும்போது, சமூகம் ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது என்பதையும் ‘பத்தா’ அழகாகப் பேசுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதே நேரத்தில், ஒரு குழந்தையின் அன்பும் நம்பிக்கையும் ஒரு மனிதனுக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் திரைப்படம் காட்டுகிறது. ஒருகாலத்தில் தன்னை நிரூபிக்க வன்முறையைத் துணையாகக் கொண்டிருந்த ஒரு ‘தாதா’, ஒரு சிறுவனுடனான உறவின் வழியாக மீண்டும் ஒரு சராசரி மனிதனாக மாறும் பயணம்தான் ‘பத்தா’.

குழந்தைகளைப் பற்றிய திரைப்படம் என்றால் குழந்தைகள் மட்டுமே ரசிக்க வேண்டும் என்பதில்லை. குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ள விரும்பும் பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக இது இருக்கிறது.

மிகச்சிறந்த திரைக்கதை, இயல்பான வசனங்கள், நகைச்சுவை, உணர்வு, மனிதநேயம் என அனைத்தையும் மிகையில்லாமல் இணைத்திருக்கும் ‘பத்தா’, சிறார்களுக்கான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது.

—   அமுதன் தேவேந்திரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.