ஊடகவியலாளர்  ராமலிங்கம் மறைவு : உலுக்கும் கேள்விகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஊடகவியலாளர் நண்பர் ராமலிங்கம் காலமானார்.

கண்னீர் அஞ்சலியை மட்டுமாவது செலுத்துவோம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நம்மால் உறுதுணையாக  இருக்க முடியவில்லை.

தமிழ் ஊடகத் துறையில் , நாளிதழ், தொலைக்காட்சி என பல தளங்களில் புகைப்பட கலைஞராக, ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் திரு.ராமலிங்கம்.  வயது 52.

கடந்த 3 வருடங்களாக தொண்டை புற்று நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நோயுடன் போராடி வந்தார்.

ஆதரவற்ற நண்பர் திரு.ராமலிங்கம், குன்றத்தூர் அருகில் உள்ள சோமங்கலத்தில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வந்தார்.

புற்று நோயுடன் போராடி வந்த நண்பர் ராமலிங்கம் இன்று மாலை காலமானார்.

உற்றார், உறவினர்கள் கைவிட்ட நிலையில் சக பத்திரிகையாள நண்பர்களும் அமைப்புகளும் தனக்கு பலம் என நம்பியிருந்த ராமலிங்கம் நம்மிடையே இல்லை.

ஊதியமும் இல்லை. பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெற முயற்சிகள் செய்தால் அதில் ஆயிரம் தடைகள் என ஆதரவற்ற நிலையில் இருந்த ராமலிங்கத்தின் சிகிச்சைக்கு உற்ற நண்பர்கள் சிலர் உளமாற உதவிகள் செய்தனர்.

அரசின் கதவுகளை குறிப்பாக சுகாதாரத் துறையின் கதவுகளை பலமுறை தட்டி முயற்சி செய்தும் ரேஷன் கார்டு இல்லை என்பதால் PET SCAN எடுக்க இயலாமல் போனதுதான் உண்மை நிலை.

ஊடகவியலாளர்  ராமலிங்கம்
ஊடகவியலாளர்  ராமலிங்கம்

பத்திரிகை நண்பர் ஒருவர் பணம் கட்டி வெளியில் அந்த ஸ்கேன் செய்யலாம் என முயற்சி செய்தபோது ராமலிங்கத்தின் உடல் நிலை இடம் தரவில்லை. இன்றைக்கு யாருமற்று செத்தேப் போனார் ராமலிங்கம்.

முதலமைச்சர் காப்பீடு அட்டை, ஆதார் அட்டை இருந்தும் ரேஷன் கார்டு இல்லாததால் காப்பீடு திட்டத்தில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் SCAN செய்ய முடியவில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள்… தலைமைச் செயலக கதவுகளை தட்டியபோதும் நடக்கவில்லை.

பாவம் அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் ஏழை எளிய மக்களை இன்சூரன்ஸ் இருந்தால்தான் ஆஞ்சியோ, ஸ்கேன், அறுவை சிகிச்சை என்று இனியும் புறந்தள்ளிவிட வேண்டாம்.

இதை காணும் சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஊடகவியலாளர் ராமலிங்கத்திற்கு செய்யும் அஞ்சலியாகவாது ஏழை, எளிய நோயர்கள் மீது கருணை காட்டவும்.

PET SCAN எடுக்க உரிய  ரேஷன் அட்டை இல்லை என்ற காரணத்தாலேயே, பொருளாதார வசதியில்லாத பலரின் SCAN கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதை  தவிர்க்க  வேண்டும்.

மறைந்த ஊடகவியலாளர் ராமலிங்கம் உடல் சென்னை  குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் ரெஸ்ட் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளது.

நல்லடக்கம் செய்ய உதவிடுவோம்.

குறைந்தப்பட்சம் அஞ்சலியாவது செய்திடுவோம்.

கடைசிக் குறிப்பு :

ஏன் ராமலிங்கம் காலமானார்?

  1. நோய் ஒரு முக்கியக் காரணம்.
  2. அதைவிடக் கொடுமையான காரணம் ராமலிங்கம் பெரிய பத்திரிகை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றவில்லை.
  3. செய்தித் தொலைக்காட்சி சானல்கள் வந்து 25 வருடங்களுக்கு மேலானாலும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சு, ஊடக பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு கிடையாது என்ற அவல நிலை.
  4. கையில் காசு பணம், அதிகாரம் இல்லை. கடைசியில் ஆதரவற்று இறந்துப் போனார் ராமலிங்கம்.

நம் பத்திரிகை ஊடக உலகில் நேர்மையாக பாடுபட்டு உழைத்த- உழைத்துக் கொண்டிருக்கும் நிறைய ராமலிங்கங்கள் உடல்நலக்குறைவு, பொருளாதார சிக்கல் என பலவகைகளில் இன்றைக்கும் போராடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் நலிவற்ற பத்திரிகை-  ஊடகவியலாளர் நலன் காக்க இயன்ற முயற்சிகள் செய்வோம்.

—  அசுதுல்லா, செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.