மங்களம் அருவியில்  திறக்கப்பட்ட நீர்வரத்து! சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

துறையூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பச்சைமலை மங்களம் அருவி இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலை தென்புற நாடு பகுதியில் அமைந்துள்ள மங்களம் அருவியில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்துத் தொடங்கியுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நீண்ட காலமாக நீர்வரத்து இன்றி இருந்ததால், பாதுகாப்பு கருதி மங்களம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அருவியில் போதுமான அளவு தண்ணீர் கொட்டுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று முதல்  மங்களம் அருவி மீண்டும் முறைப்படி திறக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வனத்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் அருவியைக் கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என துறையூர் வனச்சரக அலுவலர் நவீன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.