இன்ஸ்டாகிராம் காதல் ! 11ம் வகுப்பு மாணவி கழிவறையில் குழந்தை பெற்றார்! 😢😱
இன்ஸ்டாகிராம் காதல் ! 11ம் வகுப்பு மாணவி கழிவறையில் குழந்தை பெற்றார்!
இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த மாணவி குழந்தை பெற்றெடுத்தார். காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க இவருக்கு ஆன்ட்ராய்ட் செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்தனர். அதை பயன்படுத்தி இவர் ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார்.
அப்போது, இவருக்கும், உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த வாலிபர் தனியாக அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 22ம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்றவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு அஅம்மா மற்றும் பாட்டி வந்து பார்த்தபோது, சிறுமி குழந்தையுடன் மயங்கி கிடந்தார். இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாட்டி விசாரித்தபோது, குறிப்பிட்ட வாலிபர்தான் காரணம் என கூறியுள்ளார். இதுபற்றிய தகவலின்படி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்தனர். இது குறித்து மனநல நிபுணர்கள் கூறும்போது, ‘‘ வீட்டில் குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும். செல்போனில் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என கண்காணிக்க வேண்டும். பாதை மாறுபவர்களை கண்டறிந்து மனநல டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்’’ என்றனர்.
அங்குசம் செய்திகள் வாட்ச்ஆப் குழுவில் இணையுங்கள்