திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!

0

பாலினச் சமத்துவத்தை உரிமையாகப் பெறுவதற்கும், இணைந்து பயணிப்பதற்கும் உறுதி எடுப்பதற்கே இந்த நிகழ்வு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மகளிர் தின விழாவில் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி பெருமிதம்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழாய்வுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் பா.எழில்செல்வன் வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கிள், சே.ச., தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல், சே.ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. மற்றும் இணைமுதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் திருமதி. ஜெனோவா அரசி, முனைவர். அன்னி ரொசாரியோ, திருமதி.புஷ்ப ராணி, திருமதி. அமுதா, திருமதி. எலிசபெத் ராணி, திருமதி. சிவகாமி, திருமதி. செல்வராணி ஆகியோருக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர்ந்து பெண்கள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் சுவரொட்டிப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர். ஜெயந்தி ராணி தம் சிறப்புரையில், இச்சமுதாயத்தில் ஆண்களால் எளிதாகச் செய்யப்படும் பல செயல்களை பெண்களாலும் அவ்வாறே செய்ய இயலும் என்றாலும் சமுதாயம் அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை. அதை அனுமதியாகப் அல்லாது,  உரிமையாகப் பெறுவதற்கும், ஆணும் பெண்ணுமாக இணைந்து பயணிப்பதற்கும் உறுதி எடுப்பதற்கே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்து தம் உரையைத தொடங்கினார்.

மேலும், பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையை அடிகோடிட்டு, தான் படித்த காலத்தில் பெண்கள் கல்வி கற்க குறைவாகவே வந்தனர். ஆனால் இன்று அந்நிலைமை மாற்றம் அடைந்துள்ளதைக் குறித்து பெருமிதம் அடைவதாகக் கூறித் தம் உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, தூய வளனார் கல்லூரியின் கவின்கலைக்குழு செயலர் மாணவர் சஞ்சய் குமார் நன்றியுரையாற்றினார். நுண்கலைக் குழுவின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழாய்வுத்துறை மாணவர்கள் ஆசிக் டோனி மற்றும் வசீர் அகமது ஆகியோர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை  துணைமுதல்வர் அருளானந்தம், சே.ச., ஜென்டர் சாம்பியன் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இருதயராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேகி டயானா மற்றும் பேராசிரியர்கள் முனைவர் கீதா சிவராமன், முனைவர் ஜெயஸ்ரீ நாய்கென், முனைவர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.