மீண்டும் தலைதூக்குகிறதா, கள்ளச்சாராயம் ? விருதுநகரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் காட்சி ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு பிரிவு  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஆய்வுக்கு சென்ற மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான காவல்துறையினர், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பித்தலுபட்டி கிராமத்தில் சண்முககனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காட்சி விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

விருதுநகரில் கள்ளச்சாராயம் அப்போது அங்கு சாராயம் காய்ச்சப்பட்டு  விற்பனை செய்ய இருந்த சாத்தூர் பகுதியை சேர்ந்த தோட்ட காவலாளி தங்கம் (59), பொன்பாண்டி, நாகராஜ், ஆகிய 3 நபர்களையும்,காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 1லிட்டர் மதிப்பிலான சாராயமும் ரூ.500 சாராயம் காய்ச்ச பயன்படுத்திய அடுப்பு,பாத்திரங்கள், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து மேலும் கள்ள சாராயம் காய்ச்ச உடந்தையாக  இருந்த அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விருதுநகரில் கள்ளச்சாராயம் குறிப்பாக, தமிழகத்தில் மரக்காணம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயச் சாவுகள் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலையில், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பின்னணியில் விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தமிழகத்தில் இதற்கு முன்னர் தாக்கத்தை ஏற்படுத்திய கள்ளச்சாராய சாவுகள் !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிட்டுள்ளது. 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது.

2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 காவல்துறையினரை அதிகாரிகளை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது.

2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தில்  மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பகுதியில் உள்ள காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த அனைத்து சம்பவங்களிலும் ஒரே ஒற்றுமை தான் பலியானது அன்றாடம் வேலைக்கு சென்றாலே தன் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ள கூலி தொழிலாளிகளே என்பது வேதனைக்குரிய செய்தி.

 

— மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.