விருதுநகர் : ஃபுல் போதையில் சாக்கடையில் சரிந்த போதை ஆசாமி – காணொளி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வீடியோவை காண

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் மீது நேற்று ஒருவர் சுய நினைவு இல்லாத அளவிற்கு மது போதையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென  நிலை தடுமாறி வாறுகால் கழிவுநீரில் விழும் காணொளி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த போதை ஆசாமியை பொதுமக்கள் உதவியுடன் வெளியே மீட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சாத்தூர் பேருந்து நிலையம் சாத்தூர் நகர் பகுதி முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபாதை வாறுகால்,பேவர் பிளாக் பதித்தல், போன்ற பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய்  மதிப்பில் நடைபெற்று வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்தப் பணிகளுக்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படாமல் உரிய பாதுகாப்பு இன்றி இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அப்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கிய குழியில் கைக்குழந்தையுடன் இரு பெண்கள் உட்பட முதியவர்,கழிவு நீரில் விழுந்து காயம் அடைந்த காணொளி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தூர் பேருந்து நிலையம் இந்த சம்பவத்திற்கு பின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  பள்ளங்கள் இருக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை தடுப்புகள் அமைத்தனர்.

ஆனால் நெடுஞ்சாலைத் துறையினரின் பணிகள் சாத்தூரில் பல்வேறு பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலம் அமைக்கும் பணிகள் முழுமை அடையாததால், பேருந்து நிலையம் உள்ளே உள்ள பொது கழிப்பிடம் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக செல்லாததால் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசி பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும். அந்த வழியாக பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

— மாரீஸ்வரன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.