ஐ.நா.வின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா?

0

ஐ.நா.வின் அலுவல் மொழியான
அரபு மொழி தீவிரவாத மொழியா?

உலகில் 54 நாடுகளில் பேசப்படும் மற்றும் ஐ.நா.வின் அலுவல் மொழியான அரபு மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையில் அதை கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்தில் தேசிய புலானய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்துவதும், அரபு மொழி புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என பொத்தாம் பொதுவாக ஒரு மொழியைத் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்துவதும் கேவலமான, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

என்ஐஏ என்பது பாஜக அரசின் கைக்கூலியாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் புலனாய்வு அமைப்பாக விளங்குகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதுகுறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெள்ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்பு முகமை (என்ஐஏ) இது தொடர்பாக பத்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவ்வப்போது இவ்வழக்கு தொடர்பாக எனக் கூறி பலரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், விசாரணை நடத்திவிட்டு ‘பணம், ஆவணங்கள், மொபைல், லேப்டாப் போன்ற பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம். அங்கே பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பூந்தமல்லியில் இருப்பதால் அந்நீதிமன்றம் வந்து வழக்குரைஞரை அமர்த்தி பொருட்களை மீட்பதற்குள் பல நாள்கள் அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. பெரும் பொருட்செலவும் ஏற்படுகிறது.

வழக்குக்கு தொடர்பில்லாத பல முஸ்லிம் இளைஞர்களை இப்படி அலைய விடுவது என்ஐஏவின் தொடர்ச்சியான கொடுஞ்செயலாக உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை உக்கடம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள ஜமேஷா முபினுடன் இணையம் வழியாக அரபு மொழி படித்த சந்தேகத்துக்குரிய 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரபு மொழி உலகின் 54 நாடுகளில் பேசப்படும் மொழி. ஐ.நா.வின் அலுவல் மொழி என்பதோடு உலக முஸ்லிம்களின் ஆன்மீக மொழியாக விளங்குகிறது.
இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அரபு மொழிக்கென தனித் துறைகளே உள்ளன.

இந்நிலையில் அரபு மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், அதை கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதும், அரபு மொழி புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என பொத்தாம் பொதுவாக ஒரு மொழியைத் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்துவதும் கேவலமான, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.

இணையம் வழியே அரசு மொழியைப் பயின்ற 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாநகராட்சி 82வது வார்டு திமுக உறுப்பினரும், வரி விதிப்பு குழுத் தலைவருமான முபஷீரா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இணையவழி வகுப்பில் அரபு மொழி பயின்றவர்களில் மாமன்ற உறுப்பினர் முபஷீராவின் புதிதாக இஸ்லாத்தை தழுவிய கணவரும் ஒருவர். முபஷீராவின் தந்தை பத்ருதீன் திமுகவின் முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரும், மாமன்ற உறுப்பினர் முபஷீராவும் அவர்கள் வசிக்கும் பகுதியில் மக்களிடையே நற்பெயரைப் பெற்றவர்கள் ஆவர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்புடுத்தும் முயற்சியில் என்ஐஏ ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.

என்ஐஏ என்பது பாஜக அரசின் கைக்கூலியாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் புலனாய்வு அமைப்பாக விளங்குகிறது. அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் எவ்வாறு வேட்டையாடப்படுகிறார்களோ அதே பாணியில் சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏ பயன்படுத்தப்படுகிறது என பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


ஒரு வழக்கில் கைது நடைபெற்று குற்றவாளிகள் என்று பலரையும் கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் மீண்டும் மீண்டும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இல்லாத காரணங்களைக் கூறி தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திடம் அத்துமீறும் போக்கை என்ஐஏ கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தூண்டுதலின்பேரில், சோதனை என்ற பெயரில் என்ஐஏ அமைப்பு தமிழ்நாட்டில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடடு வருவது ஏற்புடையது அல்ல எனக் கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வழக்குகளையும் தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். என்ஐஏவிடம் ஒப்படைக்கக் கூடாது. என்ஐஏவிடம் ஒப்படைத்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.