இப்போதைய இளம்பெண்களின் லவ் தான் – கேன்( Can)

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இப்போதைய இளம்பெண்களின் லவ் தான் கேன் ( Can)

ன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

புதுமையான முறையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க குளுகுளு ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை காதலுடன் ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும்.

இப்படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்முடிந்து படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

தொழில் நுட்பக்குழுவினர்

இசை – அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு – பிரகாஷ் ருத்ரா
எடிட்டர் – மதன் G
கலை இயக்குநர் – N.K.ராகுல்.B.F.A
நடன அமைப்பு – ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பாளர் – சுகிர்தபாலன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
ஸ்டில் போட்டோகிராபர் – லால்
தயாரிப்பு மேலாளர் – P.ஆறுமுகம்
நிர்வாக தயாரிப்பாளர் Pa.சிவா,
லைன் புரொடியூசர் – M.நடராஜன், லால் தேவசகாயம்.

மதுரை மாறன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.