அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“இனிமேல் சின்னப் படங்களின் கதி?”. – ஜெய் ஆகாஷ் கவலை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

Jai Akash is worried
Jai Akash is worried

“இனிமேல் சின்னப் படங்களின் கதி?”. – ஜெய் ஆகாஷ் கவலை ! ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்து, இயக்கிய படம் ‘ஜெய் விஜயம்’. இதில் கதாநாயகியாக அக்ஷயா கண்டமுத்தன்நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். எம் ஜி.மணிகண்டன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் சமீபத்தில் தியேட்டரிலும், A க்யூப் மூவிஸ் ஆப்பில் ( A Cube movies App) வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெய் விஜயம் படத்தின் வெற்றி விழா சென்னையில் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவு தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செழியன், கில்டு சங்க தலைவர் ஜாகுவார் தங்கம், ஐ ஜே கே கட்சி துணைத் தலைவர் ஆனந்த முருகன், நடிகர்கள் பிர்லா போஸ், காதல். சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஹீரோ ஜெயம் ஆகாஷ் பேசும் போது”தியேட்டர்கள் கிடைக்காததால்இந்த ‘ஜெய் விஜயம்’ படத்தை என்னுடைய ஏ கியூப் செயலியில் ரிலீஸ் செய்ததில் இரண்டரை கோடி சம்பாதித்துவிட்டேன். இதிலேயே எனக்கு பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபம் கிடைத்துவிட்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தியேட்டரில் சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். இப்போது தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. சினிமாவை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தை மக்களிடம்கொண்டு போய் சேர்த்தால் போதும். படம் நன்றாக இருந்தால் அவர்கள் செயலியில் டவுன்லோட் செய்து பார்க்க தவறுவதில்லை. இனி சினிமா தியேட்டர்களில் பொங்கல், தீபாவளிக்கு மட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை வரும். அது நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் இல்லாவிட்டால் பார்க்க மாட்டார்கள்.

ஜெய் விஜயம் படத்தை இயக்கி தயாரித்து நடித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நடித்த படங்களில் எனக்கு வெற்றிப் படமாக ஜெய் விஜயம் அமைந்தது. அடுத்து ‘அமைச்சர் ரிட்டர்ன்’என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அதேபோல் ‘மாமரம்’ படத்திலும் நடித்திருக்கிறேன் . இந்த இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படம். ‘அமைச்சர் ரிட்டர்ன்’ படத்தை நானே இயக்கி இருக்கிறேன். தயாரிப்பா ளர்கள் கேட்டுக் கொண்டதால் இயக்கினேன். தற்போது 4 வெளிப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குகிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இனி நான் படங்கள் இயக்கப் போவதில்லை. நடிப்பில் தான் முழு கவனமும். எல்லோரும் இங்கு வாழ்த்தும் போது நடிகர் ஜெய்சங்கர் போல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜெய் ஆகாஷ் படம் வெளி வர வேண்டும் என்றார்கள். அந்த ஆசை எனக்கும் உள்ளது. நிறைய படங்களில் நான் நடிப்பேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டும் ரசிகர்கள், ரசிகைகள் அனைவருக்கும் நன்றி”
என கவலையும் உற்சாகமுமா கலந்து பேசினாராஜெய் ஆகாஷ்.

Jai Akash is worried
Jai Akash is worried

முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவுதீன் பேசும்போது,”நான் விருப்ப ஓய்வுபெற்ற பின்னர் ஒரு நிகச்சி மூலம் எனக்கு ஜெய் ஆகாஷ் நண்பர் ஆனார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது நல்ல உள்ளத்தை அறிந்துக் கொண்டேன். அவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் பற்றியும். தெரிய வந்தது. அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த நட்பில்தான் ஜெய் விஜயம் விழாவில் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றிய வர்களுக்கு வெற்றி கேடயம் வழங்க வேண்டும் என்றார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த நட்புக்காக இந்த விழாவில் கலந்து கொள்ளவந்தேன். இதுவரை சினிமா விழா எதிலும் நான் கலந்து கொண்டதில்லை. இது தான் நான் கலந்து கொண்ட முதல் சினிமா விழா. இப்படத்தில் சிறப்பாக நடித்த ஜெய் ஆகாஷ் உள்ளிட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச் செழியன் பேசும் போது “சினிமாவில் கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந் துள்ளார் ஜெய் ஆகாஷ்.அவர் வருடத்துக்கு 3 படங்களோடு நிறுத்தி விடக் கூடாது . அவர், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் போல் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ” ஜெய் ஆகாஷ் நல்ல புகழ் பெறுவார். ஏனென்றால் அவரது கடின உழைப்பும் தன்னம்பிக் கையும் அவருக்கு வெற்றி அமைத்து தரும்” என்றார்.

நடிகர் பிர்லா போஸ் பேசும்போது,”ஜெய் ஆகாஷ் எனக்கு கிடைத்த நல்ல நண்பர். அவர் நடித்த ஜெய் விஜயம் படத்தை ஏ கியூப் ஆப்பில் டவுன் லோட் செய்து பார்த்தேன். பார்த்த சில நிமிடங்களிலேயே உட்கார்ந்த இடத்தை விட்டு எங்கும் எழுந்து செல்லாமல் முழு படத்தையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன்”என பாராட்டினார். ஜெய் ஆகாஷுக்கு அவரது ரசிகர் மன்றம் சார்பில் தங்க சங்கிலி பரிசளிக்கப்பட்டது. அனைவரையும் பி ஆர் ஒ பிரியா வரவேற்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.