ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது !
டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டங்களை கவனித்ததில் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
இளம் தலைமுறை மீடியாவை நம்பவில்லை. காரணம் பல தொலைக்காட்சிகள் பெரும் முதலாளிகளுடையது. முதலாளிகள் ஆளும் அரசுக்கே காவல் காப்பார்கள் என்பதால் அவர்கள் கொடுக்கும் செய்திகளில் உண்மை இல்லை என்பதே இளைஞர்களின் புரிதல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் அதுதான் நடந்தது.
மீடியா மீது நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள் தங்கள் சோசியல் மீடியா வழியாக தாங்களே ரிப்போர்ட்டர்களாக மாறுகிறார்கள். அதை self oriented – people’s media என்றே கருதுகிறேன்.
ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணான ஊடகம்/ பத்திரிகையின் மீது இளம்தலைமுறை நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழப்பதாகும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
80 வயது கூட ஆகாத இந்திய நாட்டின் ஜனநாயகம் தளர்வடைவது நாளை என்னவாகும் என்கிற கவலையை தருகிறது.
– நாச்சியாள் சுகந்தி







Comments are closed, but trackbacks and pingbacks are open.