Friday, November 27, 2026 | 7:02 PM IST

இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் 27.11.2026

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சட்டம் படித்தவர்கள் ரயில்வேயிலும் பணிபுரியலாம்

சட்டத்தில் பட்டம் மற்றும் தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு.
கல்வித் தகுதி: மனோதத்துவத்தில் முதுகலை பட்டம், சட்டப்படிப்பு, தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோ, கவுன்சிலிங் படித்திருக்க வேண்டும்.
வயது: பணிக்கேற்ப 18 முதல் 40 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500. (ரூ.400 திருப்பித் தரப்படும்). மற்றவர்களுக்கு ரூ.250 (இது முழுமையாக திருப்பித் தரப்படும்)
கடைசி தேதி: 4.12.26
மேலும் அறிய: https://www.rrbapply.gov.in/

 

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஏற்றுமதி இறக்குமதி வங்கி பல்வேறு பணிகள்

எக்சிம் வங்கி என அழைக்கப்படும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
கல்வித் தகுதி: பிஇ/பிடெக்/எம்சிஏ/எம்பிஏ/பிஜிடிபிஏ/பிஜிடிபிஎம்
வயது; நிர்வாக பயிற்சியாளருக்கு 21 – 28 வரை
மேலாளர் பணிக்கு: 24 – 30 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600. மற்றவர்களுக்கு ரூ.100
கடைசி தேதி: 11.12.26
மேலும் அறிய: https://www.eximbankindia.in/

 

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் 1393 பேருக்கு பணி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (ஐஏஆர்ஐ) 1393 பேரை பணிக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கலவித் தகுதி: டிப்ளமோ, பிஇ/பிடெக் மற்றும் ஏதேனும் அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
வயது: பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 30 வரை. மற்றவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சலுகை உண்டு
கடைசி தேதி: 17.12.26
விபரங்களுக்கு: https://asrb.gov.in/

 

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பட்டப்படிப்பு படித்திருந்தால் விமானப்படையில் வேலை

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று,, திருமணம் ஆகாதவராக இருந்தால் விமானப் படையில் அதிகாரியாக பணியில் சேரலாம்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
வயது: 20 முதல் 26 வரை
விண்ணப்ப கட்டணம்: ரூ.550
கடைசி தேதி: 11.12.26
விபரங்களுக்கு: https://afcat.edcil.co.in/

 

பொறியியல் பட்டதாரியாக இருந்தால் என்எல்சி–யில் வேலை

என்எல்சி-யில் பயிற்சி பொறியியல் பட்டதாரி பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
கல்வித் தகுதி: பிஇ/பிடெக்
வயது: பொதுப்பிரிவினருகு்கு 21 முதல் 30 வரை. மற்றவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை சலுகை உண்டு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.854. மற்றவர்களுக்கு ரூ.354
கடைசி தேதி: 14.12.26

 

விளையாட்டு வீரர்களுக்கு (ஐசிஎப்)-யில் வேலை

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) விளையாட்டு வீரர்களை வேலைக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ
வயது: 18 முதல் 27 வரை
விண்ணபிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 9.12.2026
மேலும் அறிய: https://pb.icf.gov.in/

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.