வணிக மத்தியஸ்த முறை சமூகத்திற்குப் பெரும்பங்காற்றுகிறது – நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பேச்சு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக சபை நடுவர் தீர்ப்பாயம் அரங்கம் திறப்பு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. தீர்ப்பாயம் தலைவர் ஹரிஹரன் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது.

2004ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது 23 நீதிபதிகள் உள்ளனர். வழக்குகளின் நிலுவை கட்டுக்குள் இருந்தாலும் புதிய வழக்குகள் தினமும் அதிகரிக்கின்றன. இது மதுரை கிளை மீதுள்ள நம்பிக்கைக்கான அங்கீகாரம் ஒரு வழக்கை பதிவு செய்து நீண்ட காலம் பொறுமையுடன் காத்திருப்பதைவிட விரைவாக தீர்வு வழங்குவதையே வழக்காடிகள் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் மத்தியஸ்தம், சமரசம், லோக் அதாலத் போன்ற மாற்று வழிகள் மூலம் நிலுவை வழக்குகள் குறைக்கப்பட்டு வருகின்றன. வணிக மத்தியஸ்தமுறை சமூகத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன. சம்பந்தபட்ட துறை சார்ந்த நிர்வாகம்  தொழிலாளர் இடையிலான உறவை நன்கறிந்த ஒருவர் நீதித்துறை சார்ந்த அதிகாரியுடன் விசாரணை நடத்தும்போது உற்பத்தி நடவடிக்கைகள் நிர்வாக சிக்கல்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தூத்துக்குடி துறைமுகம், மதுரை, திருச்சி விமான நிலையங்கள் இருப்பதால் வணிக வழக்குகளே அதிகம் தாக்கலாகும் அவ்வாறு தாக்கலாகும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த மையங்கள் அவசியம் இங்கு 3 தனித்தனி அரங்குகளில் டச்ஸ்கிரீன் வசதியுடன் கூடிய வீடியோ இணைப்பு வசதிகள், நூலகம், வரவேற்பறை போன்ற வசதிகள் உள்ளன. வணிகச் சமூகம் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சிறந்த முறையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.