அங்குசம் பார்வையில் ‘காதல் என்பது பொதுவுடமை’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ’மேன்கைன்ட் சினிமாஸ்’ ஜியோ பேபி, ‘சிம்மெட்ரி சினிமாஸ்’, ’நித்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ ஜோமோன் ஜேக்கப், நித்யன் அத்புதராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சாஜின் எஸ்.ராஜ். தமிழ்நாடு ரிலீஸ் : ஜி.தனஞ்செயன். டைரக்‌ஷன் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். நடிகர்—நடிகைகள் : லிஜோ மோல், அனுஷா, ரோகிணி, கலேஷ், வினீத் ராதாகிருஷ்ணன், தீபாசங்கர். ஒளிப்பதிவு : ஸ்ரீசரவணன், இசை : கண்ணன் நாராயணன், எடிட்டிங் :டேனி சார்லஸ், ஆர்ட் டைரக்டர் : ஆறுசாமி, பாடல்கள் :உமா தேவி. பி.ஆர்.ஓ.: குணா.

தன்னைவிட நான்கு வயது மூத்த ஒரு இளம் பெண்ணின் மீது இன்னொரு இளம் பெண்ணுக்கு அஃபெக்‌ஷன் வந்து அது ரிலேஷன்சிப்பாக கண்டினியூவாகி, ”கட்டுனா அவளைத் தான் கட்டுவேன்” என்ற தீவிர தீர்மானமும் மன உறுதியும் கொண்டது தான் இந்த ‘காதல் என்பது பொதுவுடமை’.

இனிய ரமலான் வாழ்த்துகள்

‘காதல் என்பது பொதுவுடமை’
‘காதல் என்பது பொதுவுடமை’

அம்மா லட்சுமி [ ரோகிணி ]யைவிட்டுப் பிரிந்து அப்பா தேவராஜ் [ வினீத்] இன்னொரு பெண்ணுடன் சென்ற பின், அம்மா மீது அளவுகடந்த அன்பும் பாசமும் செலுத்தி அவருடனேயே இருக்கிறார் ஷாம் [ லிஜோமோல்]. மகளின் ஆசை எதுவுமென்றாலும்…நிறைவேற்றும் அம்மாவிடம் ஒரு நாள் தனது காதலைச் சொல்கிறாள் ஷாம். அதற்கும் ஓகே சொல்லும் லட்சுமி, லவ்வரை வீட்டுக்கே அழைத்து வரச் சொல்கிறார். மகளின் லவ்வருக்காக கிஃப்ட்டெல்லாம் வாங்கி வைக்கிறார். தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அம்மாவின் ஆசைப்படியே தனது லவ்வரையும் நண்பன் ரவீந்திரனையும் வீட்டுக்கு வர வைக்கிறார் ஷாம். தடபுடல் விருந்து நடக்கும் போது தான் தனது லவ்வர் நந்தினி[ அனுஷா ] என்பதை தடாலடியாக சொல்கிறார் ஷாம். அதிர்ந்து நிலைகுலைந்து போகிறார் லடசுமி. இதன் பின் ஒரு மணி நேரம் நாற்பெத்தெட்டு நிமிடங்கள் நடக்கும் மனித உணர்வுகளின் அடிப்படை மனப்போராட்டம் தான் இந்த பொதுவுடமைக் காதல்.

‘காதல் என்பது பொதுவுடமை’ இப்ப மட்டுமல்ல, எப்பவுமே ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தாலே அதிர்ச்சியாகப் பார்த்து வெறுப்பைக் கக்கும் உலகம். இந்த வகை காதலில் முதல் வெறுப்பாக முளைத்து நிற்பது சாதி, மதம். அடுத்து பொருளாதார ஏற்றத் தாழ்வு.  இப்படிப்பட்ட உலகத்தில்  பெண்ணும் பெண்ணும் காதலித்தால் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சிக்குள்ளாகும் எப்படிப்பட்ட அருவெறுப்பைக் கக்கும் என்பதற்கு ஒரு சில உண்மை உதாரணங்களை நிகழ்காலத்தில் செய்தியாகப் பார்த்தோம், பார்க்கிறோம், பார்ப்போம்.

இதைத் தான் எந்தவித சமரசமுமில்லாமல் என்று சொல்ல முடியாது, சில சமரசங்களுடனும் பல நிதர்சனங்களுடனும் அறத்துடனும் ‘சேம் செக்ஸ் லவ்’ஐ பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். லெஸ்பியன் உறவு என்பதாலேயே ஆபாசக் காட்சிகள் இருக்கும், அருவெறுப்பு, முகச்சுழிப்புக் காட்சிகள் இருக்கும் என்பதையும் அடித்து நொறுக்கியுள்ளார் ஜெயப்பிரகாஷ். கதாபாத்திரங்களின் அழகியலான காட்சிகள், அந்தக் காட்சிகளின்  உரையாடல் நீட்சி, அந்நீட்சியின் நிறைவுத்தன்மை என அருமையான திரைமொழியை நேர்மையுடன் பதிவு செய்திருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தமிழ் சினிமாவின் தனித்த அடையாளம் என்பதில் சந்தேகமேயில்லை.  இடைவேளை சீன் கட் வெகு சிறப்பு, இயல்பு.

லிமோமோல், ரோகிணி, கலேஷ், அனுஷா, வினீத், தீபாசங்கர், வினீத்தின் இரண்டாவது மனைவியாக வருபவர் [ பெயர் தெரியவில்லை ] என படம் முழுவதும் ஏழு கேரக்டர்கள் தான். ஆனால் இவர்கள் பேசும் விசயம், எல்லோருக்குமானது, எதார்த்தமானது. நடிப்பில் யாரும் யாருக்கும் சளைக்கவில்லை என்பதை எல்லா சீன்களிலும் நிரூபித்திருக்கிறார்கள். இருந்தாலும் சீனியாரிட்டிபடி பார்க்கும் போது முதலில் தோழர் ரோகிணி தான் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

‘காதல் என்பது பொதுவுடமை’  தன்னிடம் தனது மகள் காதலைச் சொன்னதும் பொங்கும் உற்சாக முகம், டைனிங் டேபிளிலில் அனுஷாவை லவ் பண்ணுவதாகச் சொன்னதும் அதிர்ச்சி முகம், இன்னொரு சீனில் சேரில் உட்கார்ந்த நிலையில் தலையில் கைவைத்தபடி பின்னால் சாய்ந்து விரக்தியுடன் சிரிக்கும் முகம், வினீத்துக்குப் போன் பண்ணும் போது “போனை வை தேவராஜ்” என வெடிக்கும் ஆத்திர முகம், வினீத்தின் இரண்டாவது மனைவியிடம், “புள்ள பெத்திருந்தா தான் உனக்குத் தெரியும்” என்ற கோப முகம் என [ அந்தக் காட்சியில் மனவேதனையை அந்தப் பெண்ணும் அவ்வளவு நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார் ] வான் நட்சத்திரம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் தோழர் ரோகிணி.

இதற்கடுத்து லிஜோமோல், அனுஷா, கலேஷ், வினீத், தீபா சங்கர் இருக்கிறார்கள். ”என்னோட டேஸ்ட் தெரிஞ்ச உனக்கு, என்னோட ஃபீலிங்ஸ் தெரியலயேம்மா”, எங்க லவ் அந்நேச்சுரல்னா நீங்க அம்மாவைவிட்டுட்டுப் போனது நேச்சுரலாப்பா” என பேசும் இடங்களிலும் “நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லேன்னா, நந்தினி மட்டும் அப்படிப்பட்ட பொண்ணா” லிஜோவின் இந்த நான்கு வார்த்தைகள் தான் பொதுவுடமைக் காதலின் அடிநாதம் என்று கூட சொல்லலாம்.

லிஜோவைக் காதலித்து, லிஜோ-நந்தினி காதல் தெரிந்ததும் விலகிவிடும் கேரக்டரில் கலேஷ் கலக்கிவிட்டார். குறிப்பாக ரோகிணியிடமும் வினீத்திடமும் அவர்களின் காதலுக்கான நியாயங்களையும் அந்தக் காதலின் உண்மைத் தன்மையையும் சொல்லும் சீனில் மனசை ‘டச்’ பண்ணிட்டீக கலேஷ் பிரதர். க்ளைமாக்ஸில் ஐநூறு ரூபாயை ரோகிணியிடம் திருப்பிக் கொடுக்கும் சீனில் தீபா சங்கரும் தீபமாக ஜொலிக்கிறார்.

கேமராமேன் ஸ்ரீசரவணனின் காட்சிக் கோணங்களில் அழகான கவிதையும் அருமையான சிறுகதையும் படித்த மனநிறைவு. மியூசிக் டைரக்டர் கண்ணன் நாராயணனின் ஆழ்மனதுக்குள்  இசைஞானி இளையராஜா சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் போல. அதன் பிரதிபலிப்பு தான் பல சீன்களில் நிசப்தம், பல சீன்களில் பார்வையாளனை பரவ நிலையில் ஆழ்த்தும் மெல்லிசை என  தனது பின்னணி இசையால், ஜெயப்பிரகாஷின் உள்ளுணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கார் கண்ணன் நாராயணன். வாழ்த்துக்கள் சகோதரா.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அனுஷாவுக்கு லிஜோமோல் மீது ஏன் லவ் வந்தது என்பதற்கான ஃப்ளாஷ்பேக் 100% ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது. ஆனால் லிஜோமோலுக்கு அனுஷா மீது லவ் வந்ததற்கான காரணம் தான் ‘பொம்மை’தனமாகப் போய்விட்டது.

இந்த ‘காதல் என்பது பொதுவுடமை’ எல்லோருக்குமானது இல்லை என்றாலும் தனித்துவமானது. இது ‘இஸம்’ பேசவில்லை, எல்லோரும் பேசத் தயங்கும் நிஜம் பேசும் சினிமா.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.