மதுரை – நக்கீரன் தோரணவாயில் இடிந்து ஜேசிபி ஆப்ரேட்டர் பலி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையின் பிரதான பேருந்து நிலையமான மாட்டுத் தாவணி அருகே மேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. வெளிபுறம் ஆம்னி பேருந்து நிலையம் முன்பு,  போக்குவரத்து நிறைந்த மேலூர் சாலையில் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டின் போது, மதுரையில் அமைக்கப்பட்ட நக்கீரன் தோரணவாயில் அமைந்துள்ளது.

கடந்த வருடம் இந்த மேலூர் சாலை, போக்குவரத்து தெரிசலைக் குறைக்க அகலப்படுத்தப்பட்டது. அப்போது இந்த தோரணவாயிலை இடிக்க, சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

நக்கீரன் தோரணவாயில்
நக்கீரன் தோரணவாயில்

ஆனால் போக்குவரத்து நெரிசலைக் கருதி அதனை இடிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று இரவு அதனை இடிக்கும் பணி JCB இயந்திரத்தைக் கொண்டு தொடங்கியது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தோரணவாயில் இடிக்கும் போது எதிர்பாராத விதமாக, தோரணவாயில் JCB இயந்திரம் மேல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் JCB ஆப்ரேட்டர், மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த நாகலிங்கம் பலியானார்.

இடிந்து விழுந்த நக்கீரன் தோரணவாயில்
இடிந்து விழுந்த நக்கீரன் தோரணவாயில்

ஒப்பந்ததாரர் நல்லதம்பி இடிபாடுகளில் சிக்கி கொண்டார். விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் நாகலிங்கம் உடலை மீட்டு மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மாட்டுத் தாவணி பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பையும், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.