அங்குசம் பார்வையில் … கள்வன் !

வேலை எதுவும் இல்லாமல் திருடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஜிவிபி, எதுக்காக பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கள்வன்’.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் கள்வன் !

யாரிப்பு: ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி.டில்லிபாபு, ஒளிப்பதிவு &  டைரக்‌ஷன்: பி.வி.ஷங்கர். வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி. நடிகர்—நடிகைகள்: ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா, கு.ஞானசம்பந்தம், வினோத் முன்னா. பாடல்கள் இசை:ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை: ரேவா, எடிட்டிங்: சான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர்: என்.கே.ராகுல். பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா`

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமம் இருட்டிப்பாளையம். வீடுகளில் அண்டா, குண்டா, குத்துவிளக்கு, நகைநட்டுகளைத் திருடி சரக்கடித்து ஜாலியாக இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷும் தீனாவும். ஹீரோ திருடன்னா, ஹீரோயின் வீட்ல திருடியே ஆகணும், அதுக்குப் பிறகு லவ் பண்ணியே ஆகணும். இதானே தமிழ் சினிமாவின் நியாமும் நீதியும். அந்த நியாயப்படியும் நீதிப்படியும் ஹீரோயின் இவானா வீட்டிற்கு இரவில் திருடப்போய் மாட்டிக் கொள்கிறார்கள் ஜி.வி.பி.யும் தீனாவும்.

இவானா மேல ஜிவிபிக்கு லவ் வருகிறது. ஆனால் இவானாவுக்கு முதலில் வெறுப்பு வருகிறது. அப்புறம் லவ் வருகிறது. திருடர்களான ஜிவிபியும் தீனாவும் ஒரு முதியோர் இல்லத்திற்கு வெள்ளையடிக்கும் வேலைக்குப் போகும் போது, அங்கிருக்கும் பாரதிராஜாவை சட்டப்பூர்வமாக தத்தெடுத்து தங்களது கிராமத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

வேலை எதுவும் இல்லாமல் திருடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஜிவிபி, எதுக்காக பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கள்வன்’.

படத்தின் இடைவேளை வரை, திருட்டு, சரக்கு, கும்மாளம், ஊர்த்தலைவருடன் ஜாலி மல்லுக்கட்டு, ஊர்ப்பஞ்சாயத்து என ஜிவிபியின் போர்ஷன் ஏனோதானோன்னு தான் போகிறது. ஒரு இளம் பெண்ணை யானை மிதித்துக் கொல்கிறது. வனத்துறை அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்து விசாரிக்கிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் அரசாங்க உதவி கிடைக்கிறது. இது தான் இடைவேளைக்குப் பிறகு படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிலும் இரவு நேரத்தில் அந்தக் கிராமத்திற்குள் புகுந்த புலியிடம் சிக்கிக் கொண்ட சிறுமியை, முதியவர் பாரதிராஜா, விசில் அடித்தே புலியை விரட்டி, சிறுமியை மீட்கும் சீனைப் பார்த்ததும், “இதென்னடா புது ட்ரெண்டா இருக்கு” என நாமும் கொஞ்சம் எகத்தாளமாகத் தான் நினைத்தோம். ஆனால் க்ளைமாக்ஸுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, பாரதிராஜாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்கை கேட்சிங்காக வைத்து கரெக்டா மேட்ச் பண்ணிவிட்டார் டைரக்டர் பி.வி.ஷங்கர். படத்தின் மெயின் லைனும் அந்த ஃப்ளாஷ்பேக் தான்.

எந்தப் படமானாலும் தனது நடிப்பு பங்களிப்பை சிறப்பாக செய்யும் இவானா, இதிலும் சிறப்பாகத் தான் நடித்துள்ளார். “போயும்..போயும் ஒரு திருட்டுப் பயலையா லவ் பண்ணுவேன்” என ஜி.வி.பி.யிடம் சீறுவதும், அதன் பின் அவரிடம் உருகுவதும் என இவானா ஓகேண்ணா. இவானாவின் அப்பாவாக வரும் கு.ஞானசம்பந்தத்திற்கு நான்கு சீன்கள் தான்.

டைரக்டரே ஒளிப்பதிவாளர் என்பதால், வனப்பகுதி கிராமத்தின் பகல் அழகையும் இரவு திகிலையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளார். பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்திற்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கு.

அது சரி டைரக்டரே.. அடிக்கடி போலீசில் சிக்கும் திருடனுக்கு( ஜிவிபி) எப்படிங்க வனத்துறையில வேலை கிடைக்கும். சி.எஸ்.ஆர்.ல பேரைச் சேர்த்தாலே இருக்குற வேலையும் போயிரும்கிறது தான் கவர்மெண்ட் ரூல். இதெப்படி உங்களுக்குத் தெரியாமப் போச்சு. சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா.

ஜி.வி.பிரகாஷுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் இந்த ‘கள்வனில்’ ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிப்பவர் பாரதிராஜா தான்.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.