சோடாபுட்டியை தூக்கி கடாசுங்கள் ! அதிநவீன காண்டூரா அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் !

என்னதான் ஃபேஷனாக கண்ணாடிகளை தேர்வு செய்தாலும், இயல்பான உடல் அங்கத்தில் அஃது ஓர் ஒட்டுறுப்பை போல உறுத்திக் கொண்டிருக்கும் விசயமாகவே அமைந்துவிடுகிறது.

0

சோடாபுட்டியை தூக்கி கடாசுங்கள் ! அதிநவீன காண்டூரா அறுவை சிகிச்சை
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் !

யற்கையோடு இயைந்த வாழ்க்கை என்பதெல்லாம் இன்று கானல் நீராகிப் போன காலம் இது. துரித உணவுகளைப் போலவே, வாழ்க்கையும் துரித கதியில் இயங்கும் இயந்திரமயமாகி போன காலம் இது. மாறும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப, மனித உடல் ஆரோக்யத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பதும் தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

முடி நரைத்து, உடல் தளர்ந்தாலும் பார்வை மங்காத தாத்தா பாட்டிகளை பார்த்த காலமும் இருந்தது. இன்றோ, பள்ளிக்கூடம் செல்லும் பையன்கள்கூட தாத்தா கண்ணாடி என்று சக மாணவர்கள் கிண்டலடிக்கும்படியாக பார்வை குறைபாட்டை எதிர்கொள்கிறார்கள்.

பொதுவில் நாற்பது வயதை கடப்பவர்களுக்குத்தான் கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்வார்கள். இன்றோ, வயது வித்தியாசமின்றி தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்நீர் அழுத்தக்குறைபாடு என விழி சார்ந்த சிக்கல்கள் பலவற்றை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பார்வைக்குறைபாடுக்கு அதன் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கண் கண்ணாடிகளை அணிவது கட்டாயமாகிறது. என்னதான் ஃபேஷனாக கண்ணாடிகளை தேர்வு செய்தாலும், இயல்பான உடல் அங்கத்தில் அஃது ஓர் ஒட்டுறுப்பை போல உறுத்திக் கொண்டிருக்கும் விசயமாகவே அமைந்துவிடுகிறது.

மாற்றாக முன்வைக்கப்பட்ட, காண்டாக்ட் லென்ஸ் பயன்பாட்டில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக பெரும்பாலோனோர் அதையும் விரும்புவதில்லை. லேசர் அறுவை சிகிச்சை மூலம் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் நடைமுறை இருந்து வந்த போதிலும் அதிலும் சில வசதிக்குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த பின்புலத்தில், இவற்றுக்கெல்லாம் மாற்றாக இனி கண்  கண்ணாடியே அணிய தேவையே இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கும் அற்புதத்தை வழங்கியிருக்கிறது, அறியில் கண்டுபிடிப்பு.

வழக்கமான லேசர் அறுவை சிகிச்சை முறைகளில் உள்ள வரம்பிடப்பட்ட எல்லைகளை தகர்த்து, துல்லியமான பார்வை, வாழ்நாள் முழுவதுற்குமான நீடித்த பலன் என்பன போன்ற மேம்பட்ட திறன்களை கொண்ட சிகிச்சை முறையாக அமைந்திருக்கிறது, காண்டுரா லேசர் டெக்னாலஜி.

கண் மருத்துவத் துறையில் நீண்ட கால பாரம்பரியம் கொண்ட கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்கி தொடர் சேவையாற்றிவரும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில், அதிநவீன காண்டுரா அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

காண்டூரா தொழில்நுட்ப சேவை அறிமுக விழாவின் போது, திருச்சி ஜோசப் மருத்துவமனையின் இயக்குநர் எம்.பிரதீபா, துணை இயக்குநர் அகிலன் அருண்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “

ஜோசப் கண் மருத்துவமனை தற்போது பார்வைக் குறைபாடுகளை நுட்பமாகக் கையாளும் விதத்தில் காண்டூரா லேசிக் என்னும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை திருச்சியில் முதல்முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைச் சரிசெய்ய கண்ணாடிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், சிலருக்கு அதனால் கண்சோர்வு, தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலரோ கண்ணாடி அணிவதைஅசௌகரியமாக உணர்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி அமையும். காண்டூரா அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம் கண் பார்வைத் திறனை அதிகப்படுத்த முடியும். இனி வாழ்நாளில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது” என்றனர்.

மிகமுக்கியமாக, ஒவ்வொரு தனிநபரின் பிரச்சினைகளுக்கு ஏற்ப துல்லியமான அறுவை சிகிச்சையை திட்டமிடுவதிலும்; அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பின் விளைவுகளை கூடுமானவரை தவிர்க்கப்படுவதே காண்டூரா அறுவை சிகிச்சையின் சிறப்பம்சம் என்பதாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில், லேசிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் அக்ஷயா, மருத்துவர் பிரியா, நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் பங்கேற்றனர.

சந்திரமோகன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.