அங்குசம் பார்வையில் ‘கட்டில்’. படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘கட்டில்’.
தயாரிப்பு & இயக்கம்: ஈ.வி.கணேஷ்பாபு, திரைக்கதை & எடிட்டிங்: பீ.லெனின், ஒளிப்பதிவு: ‘ வைட் ஆங்கிள் ‘ ரவிசங்கர், இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து. நடிகர் -நடிகைகள்: ஈ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம், கன்னிகா சினேகன், ஓவியர் ஸ்யாம், இந்திரா செளந்தர்ராஜன், மெட்டி ஒலி சாந்தி, விதார்த் ( முதல் மூன்று நிமிடங்கள் மட்டும்) பிஆர்ஓ: சதிஷ் (Aim). இடிந்து சிதிலமான வீட்டை ஏக்கத்துடன் பார்க்கிறார் விதார்த். ( இதான் முதல் சீன்) “இந்த வீட்ல தான் எங்க தாத்தா, அப்பா வாழ்ந்தார்கள். நானும் இந்த வீட்ல தான் பிறந்தேன்” அப்டின்னு கதை சொல்ல ஆரம்பிக்கிறார் விதார்த்.
சரி, மூணு தலைமுறை பாரம்பரியத்தைப் பத்தி புதுசா, சுவாரஸ்யமா சொல்லப் போறாய்ங்கன்னு நாம நிமிர்ந்து உட்கார்ந்தா….. அதுக்குப் பிறகு குத்றாய்ங்க பாருங்க அந்த குத்து குத்றாய்ங்க. ஊமைக்குத்தெல்லாம் கிடையாது, ஓப்பன் குத்து தான். திரையில் நடந்ததால நமக்கு ரத்தம் வராம தப்பிச்சோம்.
படத்தில் நடித்த அம்புட்டுப் பேரின் நடிப்பு, வசன உச்சரிப்பு எல்லாமே படு செயற்கையாக மட்டுமல்ல, அபத்தமாகவும் இருந்தது. கட்டில் கதை தொடரும்..னு இடைவேளை விட்டார்கள். நாமும் ஒரு டீ சாப்ட்டுட்டு உள்ள போய் உட்கார்ந்தா…கதை கந்தலாகி, கட்டில் சுக்குநூறா ஒடஞ்சு போச்சு.திரைக்கதை & எடிட்டிங் பீ.லெனின் என்று டைட்டிலில் கார்டு போட்டார்கள்.
ஏன்ணே இப்படி? டைரக்டர் கணேஷ் பாபு வுக்கு தியேட்டரில் நல்ல சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை போல. அட தியேட்டர்ல கூட வேணாம்ணே, கே டி.வி.ல சூப்பர் ஹிட் இரவுக் காட்சி கூட பார்க்க வேணாம். காலைக் காட்சி, மேட்னி ஷோவையாவது பாருங்கண்ணே கணேஷ் பாபு அண்ணே.
-மதுரை மாறன்