‘கே டி: தி டெவில்’- நோரா ஃபதேஹியின் கலக்கல் டான்ஸ்!
பிரேம் இயக்கத்தில் கே வி என் புரொடக்ஷன்ஸ் வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கேடி- தி டெவில்’ என்ற பான் இந்தியா படம் வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தில் ‘ஆக்ஷன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் “திற நீ எந்தன் தரணி திற நீ” எனும் துள்ளல் மிகுந்த, உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். நோரா ஃபதேஹியும் நடிகர் சஞ்சய் தத்தும் இப்பாடலில் இணைந்து ஆடியுள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலை ராஜலட்சுமி பாடியுள்ளார்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.