அங்குசம் பார்வையில் ‘கொலை’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘கொலை’

தயாரிப்பு: இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வென்சர்ஸ் & லோட்டஸ் பிலிம்ஸ் தனஞ்செயன், கமல்போஹ்ரா, சித்தார்த்தா சங்கர், துரைசிங்கம் பிள்ளை, பிரதீப், பங்கஜ் போஹ்ரா. டைரக்‌ஷன்: பாலாஜிகுமார். நடிகர்—நடிகைகள் & தொழில்நுட்பக் கலைஞர்கள்: விஜய் ஆண்டனி, மீனாட்சி செளத்ரி, ரித்திகாசிங், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, ராதிகா சரத்குமார், ஜான்விஜய், கிஷோர். ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன், இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர்: ஆறுசாமி, விஎஃபெக்ஸ்: ரமேஷ் ஆச்சார்யா. தமிழக ரிலீஸ்: ’சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன். பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.

அங்குசம் இதழ்..

பணக்காரர்கள் வசிக்கும் காஸ்ட்லியான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்தியாவின் முன்னனி மாடலிங் நடிகையான லைலா( மீனாட்சி செளத்ரி) கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்.  டிஜிபி ஆனந்த் தலைமையில் போலீஸ் பட்டாளமே அந்த ஃப்ளாட்டுக்கு வருகிறது. அந்த டீமில் இருக்கும் இளம் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் இந்த வழக்கை விசாரிக்குமாறு உத்தரவிடுகிறார் டிஜிபி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தனியாக இந்த வழக்கை விசாரிக்க திணறும் ரித்திகா சிங், க்ரைம் கேஸ் இன்வெஸ்ட்டிகேஷன் ஸ்பெஷலிஸ்டான விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார். இருவரும் சேர்ந்து விசாரிக்க களத்தில் இறங்கும் போது, சங்கிலி பிணைப்புப் போல வரிசையாக சிலர் கனெக்ட் ஆகிறார்கள். அந்த கனெக்ட்வை வைத்து, வழக்கம் போல் தமிழ் சினிமா பாணியில் க்ளைமாக்சில் கொலையாளி யார் என்பதற்கு விடை சொல்வது தான் இந்த ‘கொலை’.

மாடலிங் வீட்டு வேலைக்காரப் பெண், மாடலிங்கின் லவ்வர்ஸ் சித்தார்த்தா சங்கர்,அர்ஜுன் சிதம்பரம் கிஷோர், மாடலிங் கம்பெனி நடத்தும்  முரளி சர்மா என விசாரணை வளையத்திற்குள் வரிசையாக சிக்கி, ஆரம்பித்த இடத்திலேயே க்ளைமாக்சில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது தான் டைரக்டர் பாலாஜிகுமாரின் பிரிலியண்டான ஸ்கிரிப்ட் மூட்.

இந்த மாதிரியான கொலை விசாரணைப் படங்களில் பெரும்பாலும், போலீஸ் அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு செம ஸ்பீடாக இன்னோவா காரில் வந்து இறங்குவார்கள், “ஃபாரன்ஸிக் ஆட்களுக்குச் சொல்லியாச்சா, அட் தி ஸ்பாட் எவிடென்ஸ் கிடைச்சுதா? சந்தேகப்படும்படியான ஆட்களை விசாரிச்சீங்களா? பாடிய போஸ்மார்டத்துக்கு அனுப்புங்க குயிக் குயிக். இன்னும் ரெண்டே நாள்ல எனக்கு டீடெய்ல ரிப்போர்ட் வந்தாகணும்” இதே டெம்ளேட்டில் டெம்பர் குறையாம சவுண்ட் விட்டுக் கிளம்பிவிடுவார்கள்.

ஆனால் இந்தக் ‘கொலை’யில் விஜய் ஆண்டனி டோட்டல் டிஃபெரென்ஸாக இருக்கிறார். தனக்கு கீழ் உள்ள போலீஸ் அதிகாரி ரித்திகா சிங்கிற்கு பல வகைகளில் உதவுவது, சந்தேக லிஸ்டில் உள்ளவர்களைத் தூக்கி வந்து, சத்தம் அதிகம் போடாமல் சாஃப்டாக டீல் பண்ணி என்கொயரி பண்ணுவது ,( அதுக்காக படத்தின் முக்கால்வாசி சீன்களில் ‘ஹஸ்கி’ வாய்ஸிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்) நடையில் நிதானம், ஹேர் ஸ்டைலில் உப்பு—மிளகு காம்பினேஷன்,( அட   அதாங்க சால்ட் & பெப்பர்) என மனுஷன் அசத்துகிறார். ரித்திகா சிங்கையும் சும்மா சொல்லக் கூடாது. மேலதிகாரி ஜான்விஜய்யின் எகத்தாளப் பேச்சைக் கண்டு கொள்ளாமல், கொலையாளி யார்? காரணம் என்ன என்பதைக் கண்டு பிடிப்பதில் உண்மையான போலீசுக்கும் இருக்கும் அக்கறை இவற்றை பல சீன்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கிட்டத்தட்ட மாடலிங் உலகின் தாதாவாக ராதிகா சரத்குமாரைக் காட்டியியிருக்கிறார்கள். “எனக்குத் தேவை அவ உடம்பு, அதுல 50 கிராம் கூடவும் கூடாது, குறையவும் கூடாது” என ராதிகா சொல்வதும், “அக்ரிமெண்டுக்கும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கும் ஓகேன்னா நீ தான் இந்தியாவின் டாப் மாடல்” என மீனாட்சி செளத்ரியிடம் முரளிசர்மா சொல்வதும் மாடலிங் உலகின் நிஜ ரூபத்தைக் காட்கிறது.

மாடலிங் மங்கையான மீனாட்சி செளத்ரி, கரெக்டான சாய்ஸ் தான் என்பதை படத்தின் முதல் சீனிலேயே வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” ரீமிக்ஸ் சாங்கில் மனசை அள்ளுகிறார். அதே நேரம் ஒரு சீனில் ‘இந்தியாவில் இப்படி ஒரு ஸ்ட்ரெச்சர் உள்ளவளைப் பார்த்ததேயில்லை” என மீனாட்சி செளத்ரியைப் பார்த்து முரளிசர்மா சொல்வது கொஞ்சம் ஓவர் தான். அதே போல் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஸ்கிரீன்ப்ளேவுக்குள் வந்த அந்த சிறுமி யாமினி கேரக்டர் ரொம்பவே குழப்புகிறது.

என்ன ஒண்ணு க்ரைம்& த்ரில்லர் படங்களுக்குரிய ஸ்பீட் இல்லாமல் ரொம்பவே நிதானமாக சீன்கள் நகருவது தான் வீக். மற்றபடி இந்தக் ‘கொலை’க்கு முக்கியமான மற்றும் பலமான சாட்சிகள்

டைரக்டர் பாலாஜிகுமாரின் பிக்சரைசிங்

மியூசிக் டைரக்டர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

கேமராமேன் சிவகுமார் விஜயன்

ஆர்ட் டைரக்டர் ஆறுசாமி

விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா

 –மதுரைமாறன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.