அங்குசம் பார்வையில் ‘சத்திய சோதனை’

0

அங்குசம் பார்வையில் ‘சத்திய சோதனை’

தயாரிப்பு: ‘சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத்ராம். டைரக்‌ஷன்: சுரேஷ் சங்கையா. நடிகர்—நடிகைகள்: பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா,கு.ஞானசம்பந்தம்,  ரேஷ்மா பசுபுலேட்டி, ‘சித்தன்’ மோகன், செல்வமுருகன், ஹரிதா, பாரதி, ‘ஹலோ’ கந்தசாமி, ராஜேந்திரன், முத்துப்பாண்டி, கர்ணா ராஜா. ஒளிப்பதிவு: ஆர்.வி.சரண், பாடல்கள் இசை: ரகுராம், பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி, ஆர்ட் டைரக்டர்: வாசுதேவன், எடிட்டர்: வெங்கட் ராஜென். பி.ஆர்.ஓ: நிகில் முருகன்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஐயப்பனுக்கு மாலை போட்டவர்களின் இரவு பூஜை நடக்கிறது. மதுரையின் பிரபல ரவுடி  வரிச்சூர் செல்வம் போல் இருக்கும்   ஆஜானுபாகுவான ஒருத்தர் ‘ஐட்டம்’ வீட்டில் ‘வேலை’ முடிந்து முப்பது நாற்பது பவுன் நகைகளை அணிந்து கொண்டு புல்லட்டில் புறப்படுகிறார். அந்த நடமாடும் தங்க நகைக்கடையை வழி மறிக்கும் நாலு பேர், போட்டுத் தள்ளிவிட்டுப் போய்விடுகிறார்கள். இதெல்லாமே டைட்டில் போடும் போதே நடந்துவிடுகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

டைட்டில் முடிந்ததும் செம்மண் தேரிக்காடு. அதில் டூவீலரில் வருகிறார் ஹீரோ பிரேம்ஜி அமரன். வரும் போதே அவருக்கு ஸ்வயம் சித்தாவை பெண் பார்த்த ஃப்ளாஷ்பேக்கை ஓட்டிப் பார்க்கிறார். ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் மட்டமல்லாக்க கிடக்கும் நகைக்கடை பிணத்தைப் பார்க்கிறார். பிணத்தை அவர் பார்க்கும் போது, கையில் வாட்ச், கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி, ஒரு செல்போன் மட்டும் இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப் போகும் போது, வழியில் ஒரு பாட்டியையும் ஏற்றிக் கொண்டு போகிறார்.

சங்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் போனதும் பிரேம்ஜிக்கு நடக்கும் போலீஸ் டார்ச்சர்கள் தான் ‘சத்திய சோதனை’. கிராமத்துக் கதைக்களம்னாலே கோவில் திருவிழா, முன்னூறு—நானூறு குரூப் டான்ஸர்களின் டப்பாங்குத்து டான்ஸ், ஹெலிகேம் கேமரா, ஹெலிகாப்டரில் கேமரா, அப்புறம் ஹீரோ எண்ட்ரி, வில்லனுக்கு டிஸெண்ட்ரின்னு தொவச்ச துணியவே  தொவச்சு கந்தலாக்கி, படம் பார்க்குற நம்மையும் கந்தலாக்குவாய்ங்க. ஆனா  “வாய்யா என் ராசா”ன்னு வாய் நிறைய கூப்பிட வச்சுட்டாரு இந்த ‘சத்திய சோதனை’ டைரக்டர் சுரேஷ் சங்கையா.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சங்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷன் செட், ரெண்டு கான்ஸ்டபிள் வீடு( அதையும் கால்வாசி தான் ஸ்கீரினில் காட்டுகிறார்), ஜட்ஜ் ஞானசம்பந்தம் வீடு, ஒரு கோர்ட் செட், அப்பப்ப டாப் ஆங்கிளில் செம்மண் தேரிக்காடு இவ்வளவு தான் மொத்த படமும். ஆனா இதவச்சுக்கிட்டு திரைக்கதை மூலமாகவும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின்( அது போலீசாக வரும் சித்தன் மோகனாகட்டும், செல்வமுருகனாகட்டும் ஜட்ஜாக வரும் ஞானசம்பந்தமாகட்டும், நான்கு கொலைகாரர்களாகட்டும்) இயற்கை குணாதிசயங்கள் மூலம் இரண்டு மணி நேரம் நம்மை சிலிர்க்க வைத்துவிட்டார் சுரேஷ் சங்கையா.

அதிலும் அந்தப் பாட்டி கேரக்டர் கோர்ட்டில் ஜட்ஜைப் பார்த்து, “ஐயா காலைல இருந்து வெறும் வகுத்தோட இருக்கேன். எனக்கு ஆயுளோ, தூக்கோ என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க, அத சீக்கிரமா சொல்லுங்க, என்னால நிக்க முடியல” என சொல்லிக் கொண்டே பாக்ஸில் உட்காரப் போகிறார். உடனே ஜட்ஜ் ஞானசம்பந்தம், “அந்தம்மாவுக்கு சேர் எடுத்துப் போடுய்யா” என போலீசுக்கு ஆர்டர் போட்டுவிட்டு, “எல்லாமே பொதுவுடமையா இருக்குற வரைக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை” என போட்டுத்தாக்கும் சீன் சங்கையாவின் மனசாட்சி தான்.

”அடடே பரவாயில்லையே நல்லாவே பண்ணிருக்காரே” என ஆச்சர்யப்பட வைக்கிறார் பிரேம்ஜி அமரன். கவர்ச்சிப் பதுமையாகவே பல படங்களில் வந்த ரேஷ்மா பசுபுலேட்டி, இதில் பிரேம்ஜியின் அக்காவாக வந்து மனம் கவர்கிறார்.  அதே போல் கான்ஸ்டபிளாக வரும் அந்தப் பொண்ணும் கவனம் ஈர்க்கிறார்.

இசையும் பின்னணி இசையும் தாளம் போட வைக்கிறது, ரசிக்க வைக்கிறது, உருக வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், கதையுடன் நம்மை பயணிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த மாதிரி சினிமா வருகிறது, வரப்போகிறது என்பதையாவது மக்களுக்குத் தெரியும்படியான காரியங்களில் தயாரிப்பாளர் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், சத்திய சோதனை வெற்றிச் சாதனை ஆகியிருக்கும்.

–மதுரை மாறன்   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.