புகையிலை –  மசாலா போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் உட்பட மூன்று பேர் கைது.

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

புகையிலை –  மசாலா போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் உட்பட மூன்று பேர் கைது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த அரியக்குடி ரயில்வே கேட் அருகில் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
காவல் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்திதனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பை, மற்றும் சாக்கு மூடைகள் வைத்திருந்த மூன்று நபர்களை பிடித்து சோதனை செய்ததில் அதில் 48 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், மற்றும் குட்கா பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சோமு துரைப்பாண்டி, மற்றும் அவரது நண்பர்கள் சண்முகம் சற்குணம் என தெரியவந்தது. இதனை அடுத்து வழக்கு பதிந்த போலீசார் மூவரையும் கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

5
Leave A Reply

Your email address will not be published.