அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என்னாச்சு?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சின்னம்பூண்டி என்ற ஊரில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலிருந்து முந்தைய திமுக ஆட்சியில் சிறப்பான திட்டமாக ரூ.200 கோடிக்கு மேல் திட்ட மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. பூதலூர் ஊராட்சி ஒன்றியம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகள் திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய 215 கிராமங்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. பல்வேறு ஊர்களில் ஏற்கெனவே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆனால், பல கிராமங்களில் குறிப்பாக அய்யனாபுரம் போன்ற பல ஊர்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. மேலும் பல கோடி செலவில் இத்திட்டம் கொண்டு வந்தாலும், அதில் செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகமும் குடிநீர் வடிகால் வாரியமும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். தொடர்ந்து ஆறுமுறை எம்.எல்.ஏ.ஆக துரை.சந்திரசேகரன், எம்.பி.யாக தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் சி.முரசொலி ஆகியோர் வாய்ச்சவடால் பேச்சால் வலம் வருகிறார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. புதியதாக அமைந்த ஆட்சியிலாவது, விடிவு கிடைக்குமா?

தஞ்சை க.நடராசன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.